- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகையிடம் ரூ. 77 லட்சம் அபேஸ் செய்த முன்னாள் உதவியாளர் - அதிரடியாக கைது...

பிரபல நடிகையிடம் ரூ. 77 லட்சம் அபேஸ் செய்த முன்னாள் உதவியாளர் – அதிரடியாக கைது செய்த போலீசார்!

- Advertisement -

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இந்தியில் பல முன்னணி ஹீரோக்களுன் நடித்து வருகிறார். பல வெற்றி படங்களில் ஆலியா பட் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவரது கணவர் ரன்வீர் கபூர். இவரும் இந்தியில் பிரபல நடிகராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஆலியா பட், எடர்னல் சன்ஷைன் புரடக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார். இவரிடம் வேதிகா பிரகாஷ் ஷெட்டி என்பவர் பர்சனல் உதவியாளராக பணியாற்றினார். அவரது வரவு செலவு கணக்குகள் மற்றும் வங்கி கணக்குளை அவர்தான் கவனித்துக்கொண்டார்.

- Advertisement -

ஆலியா பட்டின் நிதி ஆவணங்கள் மற்றும் பணம் கையாள்வது தொடர்பான வேலைகளை வேதிகா பிரகாஷ் ஷெட்டி செய்து வந்தார். அப்போது அவர் போலி ரசீதுகளை உருவாக்கி நடிகை ஆலியா பட்டை ஏமாற்றியுள்ளார். இரண்டு ஆண்டுகளில் ஆலியா பட்டின் கையெழுத்தை போலியாக போட்டு 77 லட்சம் ரூபாய் வரை வேதிகா மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆலியா பட்டின் அம்மா சோனி ரஸ்தான், சில மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்தார். மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவியல் மற்றும் நம்பிக்கை மோசடி தொடர்பான பிரிவுகளின் கீழ் மும்பை ஜூஹூ போலீசார் வேதிகா பிரகாஷ் ஷெட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

- Advertisement -

இதையடுத்து வேதிகா தலைமறைவானார். பல்வேறு இடங்களில் மும்பை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 மாதங்கள் கடந்த நிலையில், பெங்களூருவில் நேற்று முன்தினம் வேதிகா பிரகாஷ் ஷெட்டியை போலீசார் கைது செய்தனர். இப்போது அவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பிரபல நடிகை ஆலியா பட்டிடம் 77 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவரது முன்னாள் பெண் உதவியாளரை மும்பை போலீசார் கைது செய்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான நட்சத்திர நடிகர் நடிகைகள் தங்களது வரவு செலவு கணக்குகள் வங்கி பரிவர்த்தனைகளை தங்களது பர்சனல் உதவியாளர்களிடம்தான் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் பலரது மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்