நடிகர் விஜய் சேதுபதி துவக்கத்தில் துணை நடிகர்களில் ஒருவராக திரையில் சில காட்சிகளில் தோன்றியவர். அவருக்கு கேரக்டரும் இருக்காது. பெயரும் இருக்காது. பத்து பேரில் ஒருவராக கேமரா முன் நின்றுவிட்டு ரூ. 250 சம்பளமாக வாங்கிக் கொண்டு இருந்தவர். எம் குமரன் சன் ஆப் மகாலட்சி படத்தில் அப்படி ஒரு காட்சியில் நடித்த போதுதான் அவரது சம்பளம் ரூ. 400 ஆக அதிகரித்துள்ளது.
இதை ஒரு நேர்காணலில் தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி, என் சம்பளம் ரூ. 250ல் இருந்து 400 ரூபாயாக அதிகரிக்க ஜெயம் ரவி படத்தில் நடித்ததுதான் காரணம் என்று வெளிப்படையாக கூறியிருந்தார். ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான முன்னணி நடிகராக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.
தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து, ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற விஜயசேதுபதி ரம்மி, தர்மதுரை, சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.
ஒரு கட்டத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி அடுத்து பேட்ட படத்தில் ரஜினிக்கும், விக்ரம் படத்தில் கமலுக்கும், இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கும் வில்லனாக நடித்தார். இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்திலும், மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் என்ற படத்திலும் விஜய் சேதுபதி பிஸியாக நடித்து வருகிறார்.
நிறைய படங்களில் கேமியோ ரோலிலும், சில படங்களில் வில்லனாகவும், சில படங்களில் முழுமையாக ஹீரோவாகவும் நடித்தார். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி படம் என்றாலே இதில் வில்லனா, ஹீரோவா, கேமியோ ரோலா என புரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போகும் அளவுக்கு தொடர்ந்து அவரது படங்கள் வெளிவந்தன. இதையடுத்து வில்லன் ரோலில், கேமியோ ரோலில் நடிப்பதில்லை என ஏற்கனவே தெரிவித்திருந்தார் விஜய் சேதுபதி.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் ராம்சரண், நாயகியாக ஜான்வி கபூர் நடிக்கும் அவரது 16 வது படத்தில், வில்லனாக நடிக்க அந்த படத்தை தயாரிக்கும் தயாரிக்கும் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. ராம்சரண் 16 என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் வில்லனாக நடிக்க தனக்கு ரூ. 20 கோடி சம்பளமாக கேட்டுள்ளார் விஜய்சேதுபதி. ராம்சரணுக்கு இந்த படத்தில் ரூ. 200 கோடி சம்பளம் என்ற நிலையில், தனக்கு அதில் 10 சதவீதமாக ரூ. 20 கோடி விஜய் சேதுபதி கேட்டுள்ளார்.





