- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் கட்சியில் சேருவாரா? இல்லே… விஜய் கட்சியில் சேருவாரா? - விரைவில் அரசியலுக்கு வருவேன் என...

கமல் கட்சியில் சேருவாரா? இல்லே… விஜய் கட்சியில் சேருவாரா? – விரைவில் அரசியலுக்கு வருவேன் என அறிவித்த பிரபல சீனியர் நடிகை!

- Advertisement -

சினிமாவில் பிரபலம் அடையும் நடிகர் நடிகைகள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிது இல்லை. காலம் காலமாக அது தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல மொழி சினிமா துறைகளிலும் நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. எம்ஜிஆர் சிவாஜி கணேசன் கமல்ஹாசன் விஜயகாந்த் விஜய் சிரஞ்சீவி பவன் கல்யாண் என்டி ராமாராவ் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அம்பிகா. ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் என அன்றைய முன்னணி ஹீரோக்களுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர். இவரது தங்கை ராதாவும் முன்னணி நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்கள். மற்ற மொழி படங்களிலும் நிறைய நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

குறிப்பாக அம்பிகா கமல் மற்றும் ரஜினியுடன் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். குறிப்பாக காதல் பரிசு காக்கிச்சட்டை படிக்காதவன் போன்ற பல படங்களில் அம்பிகா நடித்திருக்கிறார். சமீபத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்த நடிகை அம்பிகா அண்ணாமலையார் சுவாமியை பக்தி பரவசத்துடன் வழிபட்டார். அங்கிருந்த பக்தர்கள் சிலர், நடிகை அம்பிகாவுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

அப்போது நடிகை அம்பிகா செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த ஒரு வாரமாக அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பெயரும் படமும் அடிக்கடி தென்பட்டு வந்ததால் இப்போது அருணாசலேஸ்வரரை சந்திக்க வந்துள்ளேன். சுவாமியை வழிபாடு செய்தது மனதிற்கு நிறைவாக உள்ளது.

- Advertisement -

எனக்கு அரசியலுக்கு வரலாம் என்ற எண்ணம் உள்ளது. அரசியல் மூலமாக ஏதாவது இரண்டு விஷயம் அல்லது இரண்டு நபர்களுக்கு நல்லது செய்ய முடிந்தால் பெருமையாக நினைப்பேன். கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன். எனக்கு மூடநம்பிக்கை கிடையாது. ஆனால் கடவுள் நம்பிக்கை உண்டு. தலை விதிப்படி எது நடக்குமோ அது நல்லதாகவே நடக்கும்.

போதைப்பொருள் உயிரை கெடுக்கும். நடிகர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவதை பார்த்து மற்றவர்கள் அதை பயன்படுத்துவார்கள். அதனால் நடிகர்கள் போதைப்பொருள்களை பயன்படுத்துவது மிகவும் தவறான விஷயம் என்று நடிகை அம்பிகா கூறியிருக்கிறார். ஆனால் தன்னுடன் பல படங்களில் நடித்த கமல் கட்சியில் சேருவாரா, அல்லது விஜய் கட்சியில் சேருவாரா என ரசிகர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்