- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது அபிமான நடிகரை எதிர்த்து களத்தில் நிற்பாரா சிவகார்த்திகேயன் - பொங்கல் அன்று ரசிகர்களை சந்திக்க...

தனது அபிமான நடிகரை எதிர்த்து களத்தில் நிற்பாரா சிவகார்த்திகேயன் – பொங்கல் அன்று ரசிகர்களை சந்திக்க வருவாரா அயலான்

- Advertisement -

தீபாவளி பண்டிகைக்கு கார்த்தி நடித்த ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட அயலான் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அதே போல் அரண்மனை 4, விக்ரம் நடித்த தங்கலான் படமும் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் படம், பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள இப்படத்தில், ரஜினி கெஸ்ட் ரோலில் வருகிறார் என கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்புகளும் ஏறக்குறைய முடிந்துவிட்டன.

- Advertisement -

ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பில் 30 முதல் 40 நாட்கள் வரை, ரஜினி கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. கெஸ்ட் ரோலில் நடிக்க சில தினங்கள் போதுமே என்ற நிலையில், இத்தனை நாட்கள் ரஜினி படப்பிடிப்பில் கலந்துகொண்டது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படம் மாஸ் ஹிட் படமாக ரஜினிக்கு அமைந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து இந்த படம் வெளிவர இருப்பதால், ரஜினி சிறப்பு தோற்றத்தில் வராமல் படம் முழுக்க வந்தால், இதுவும் மாஸ் ஹிட் ஆகுமே என்பதால், கதையில் ரஜினி வரும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அதனால், லால் சலாம் படம், ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் படமாக மட்டும் இல்லாமல், முழுக்க ரஜினி படமாகவே இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது. ரஜினி அதிக காட்சிகள் வரும் வகையில், கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி என்றால், இந்த பொங்கல் ரஜினி பொங்கலாக இருக்கும் என்ற மகிழ்ச்சி, ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே பொங்கல் படங்களில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படமும் ரிலீஸ் ஆகிறது. இது அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படமாக இருப்பதால், இந்த படம் லால் சலாமுக்கு போட்டியாக அமைய வாய்ப்புள்ளது. ரஜினி ரசிகரான சிவகார்த்திகேயன், ரஜினியுடன் மோதுவாரா அல்லது பொங்கலுக்கு முன்னதாக அல்லது பொங்கலுக்கு பின்பு அயலான் படம் வெளிவர வாய்ப்புள்ளதா என, வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

- Advertisement -

சற்று முன்