- Advertisement -
Homeபொழுதுபோக்குஅங்குள்ள நடிகர்கள் அனைவரும் முட்டாள்கள், அவர்களுக்கு மூளையே கிடையாது - பாலிவுட் நடிகை கங்கனா ரெனாவத்...

அங்குள்ள நடிகர்கள் அனைவரும் முட்டாள்கள், அவர்களுக்கு மூளையே கிடையாது – பாலிவுட் நடிகை கங்கனா ரெனாவத் எம்பி இப்படி பேசியிருக்கிறாரே?

- Advertisement -

எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர் பாலிவுட் நடிகை கங்கனா ரெனாவத். இவர் தமிழில் தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2 ஆகிய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இதில் தலைவி படம் மட்டுமே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை, பரிச்சயத்தை பெற்றுத் தந்தது. கடந்தாண்டில் பி வாசு இயக்கத்தில் அவர் நடித்த சந்திரமுகி 2 படமும் வெற்றி பெறவில்லை.

இந்தியில் நிறைய படங்களில் நடித்துள்ள கங்கனா ரெனாவத், இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து சண்டிகா் விமான நிலையத்தில் பாதுகாப்பு பெண் போலீஸ்காரர், கங்கனா ரெனாவத்தை ஓங்கி அறைந்த சம்பவமும் நாடு முழுவதும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

எப்போதுமே தடாலடியாக சர்ச்சையான கருத்துகளை பேசி விமர்சனங்களில் சிக்கிக் கொள்பவர் நடிகை கங்கனா ரெனாவத். இப்போது எம்பி ஆன பின்பும் அவரது பேச்சில் பழைய பழக்கம் இன்னும் மாறவில்லை. தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை பேசி விமர்சனத்துக்கு ஆளாகி வருவார். இப்போதும் அதுபோன்ற கருத்துகளை பேசியிருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கங்கனா ரெனாவத், எனது சினிமா வாழ்க்கையில் நிறைய நேரத்தை பாலிவுட்டில் செலவு செய்து விட்டேன். அங்கு இருப்பவர்கள் எல்லாம் யார், அவர்கள் என்னிடம் எப்படி பழகுவார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் பாலிவுட்டில் நடக்கும் எந்த பார்ட்டிக்கும் நான் செல்வது இல்லை.

- Advertisement -

பாலிவுட்டில் எந்த நடிகருடனும் நான் நெருங்கிப் பழகுவது இல்லை. உண்மையை சொல்லப் போனால் எனக்கு பாலிவுட்டில் நண்பர்களே கிடையாது. தொழில் ரீதியாக நடக்கும் விருந்துகளிலும் கூட நான் கலந்துக்கொள்வது இல்லை. என்னை பொருத்தவரை நான் பாலிவுட் ஆள் கிடையாது.

பாலிவுட்டில் உள்ள அனைவரும் முட்டாள்கள். அவர்களுக்கு மூளையே கிடையாது. சினிமா பார்ட்டியில் பிராண்டட் வாட்சுகள், பைககள், விலை உயர்ந்த பிராண்டட் கார்கள், ஒருவருக்கு ஒருவர் டேட்டிங் செல்வது, அல்லது அவர்களது உறவுகள் குறித்துதான் பேசுகின்றனர். அல்லது மற்றவர்களது உடல் தகுதி குறித்து பேசிக்கொள்கின்றனர். வேறு எந்த ஆக்கபூர்வமான விஷயங்கள் குறித்து பேசிக்கொள்ள மாட்டார்கள். பாலிவுட் பார்ட்டிகளில் நடக்கும் சம்பவங்களை நினைத்தால் மிகவும் சங்கடமாக இருக்கிறது. என்னை பொறுத்த வரை அதுபோன்ற பார்ட்டிகளுக்கு நான் எப்போதும் செல்ல மாட்டேன். பாலிவுட் நபர்களுடன் என்னால் நட்பு கொள்ள முடியாது. இதை உறுதியாக சொல்வேன் என்று அந்த நேர்காணலில் பேசி இருக்கிறார் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரெனாவத். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்