மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் கொடி டிராகன் பைசன் காளமாடன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். சமூக வலைதளங்களில் பரவிய தனது காதல் பிரிவு குறித்த வதந்திகளுக்கு அனுபமா பரமேஸ்வரன் ஒரு விளக்கம் தந்திருக்கிறார். பெயரை குறிப்பிடாமல் பேசிய அவர், கடந்த ஆண்டு உணர்ச்சிபூர்வமானதாக தனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.
மேலும் ஒரு கட்டத்தில் தன்னைத்தானே தொலைத்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். நடிகர் துருவ் விக்ரமுடன் பைசன் காளமாடன் படத்தில் இணைந்து நடித்ததைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே நெருக்கமான காதல் ஏற்பட்டதாக தகவல் பரவியது.
அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் அன்-பாலோ செய்ததும் அந்த நேரத்தில் நடிகை அனுபமா பதிவிட்ட சில உணர்ச்சிபூர்வமான பதிவுகளும் இந்த விவகாரத்தை மேலும் வலுப்படுத்தியது. இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு தான் கடந்து வந்த அந்த கடினமான நேரத்தை பற்றி பேசிய அனுபமா பரமேஸ்வரன் மேலும் சில விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் கூறியதாவது, அந்த காலகட்டம் எனக்குள் என்னை முதன்மைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை புரிய வைத்தது. அது மட்டும் இல்லை. வாழ்வின் பெரும்பாலான நாட்களை மற்றவர்களுக்காகவே வாழ்ந்த பிறகு இப்போது என் வாழ்க்கையின் முழு கட்டுப்பாட்டையும் நான் என் கையில் எடுத்துள்ளேன்.
தற்போது என் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு நல்ல கட்டத்தில் இருக்கிறேன். கடந்த காலத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து செல்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் அனைவருக்கும் விளக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
சில அனுபவங்களை அமைதியாக தனிப்பட்ட முறையில் வைப்பதே சிறந்தது என்றும் நம்புகிறேன் என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் கூறியிருக்கிறார். சாதாரண பெண்ணாக இருந்தாலும் சினிமா நடிகையாக இருந்தாலும் காதல் உணர்வு அனைவருக்குமே பொதுவானதுதான். ஆண் பெண் அன்பு என்பது எல்லா இடங்களிலும் மலரக்கூடியது. அந்த பிரிவின் வருத்தம்தான் அனுபமா பரமேஸ்வரின் காதல் தோல்வி தத்துவங்களாக வெளிப்படுகிறது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.





