- Advertisement -
Homeபொழுதுபோக்குபொதுஇடங்களில் தலை காட்டாத நடிகை அனுஷ்கா… காதி படம் பிரமோசனுக்கு வராதது ஏன்? - வெளிச்சத்துக்கு...

பொதுஇடங்களில் தலை காட்டாத நடிகை அனுஷ்கா… காதி படம் பிரமோசனுக்கு வராதது ஏன்? – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

சினிமாவில் நடிப்புக்காக கொண்டாடப்பட்ட நடிகைகளை காட்டிலும் அழகுக்காக கொண்டாடப்பட்ட நடிகைகளே மிக அதிகம். அழகான நடிகைகள் பின்னாளில் சிறந்த நடிகையாகவும் உருவாகி ரசிகர்களின் மனங்களில் மேலும் அதிக வரவேற்பை பெற்றுவிடுகின்றனர். அந்த வரிசையில் நடிகை அனுஷ்காவும் ஒருவர். அவரது அழகான தோற்றம் தெலுங்கு தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.

குறிப்பாக பாகுபலி படத்தில் தேவசேனை கேரக்டரில் அவரது நடிப்பு பலத்த பாராட்டை பெற்றது. அதே போல் அருந்ததி படத்திலும் அனுஷ்காவின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அருந்ததி படத்தில் நடித்த பிறகுதான் அனுஷ்காவுக்கு தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் ரெண்டு படத்தில் மாதவனுக்கு ஜோடியாக தமிழில் நடித்திருந்தார்.

- Advertisement -

ரஜினியுடன் லிங்கா சூர்யாவுடன் சிங்கம் சிங்கம் 2 கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் விஜயுடன் வேட்டைக்காரன் அஜீத்குமாருடன் என்னை அறிந்தால் சிம்புவுடன் வானம் ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் இஞ்சி இடுப்பழகி என தமிழில் பல படங்களில் நடித்த அனுஷ்கா பெரிய அளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த பிறகு அவர் தமிழில் படங்களில் நடிக்கவில்லை. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் அவர் நடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த போது அந்த படத்தில் உடல் பருமனான பெண் கேரக்டரில் அவர் நடித்தார். அதற்காக உடல் எடையை அவர் கணிசமாக அதிகரித்தார்.

- Advertisement -

இஞ்சி இடுப்பழகி படத்துக்கு பிறகு அவரது உடல் எடையை குறைக்க பலவிதமாக முயற்சித்தும் முடியவில்லை. உணவு கட்டுப்பாடு உடற்பயிற்சி யோகா என பல விஷயங்களை அனுஷ்கா கடைபிடித்தும் அவரது உடல் எடை பழைய நிலைக்கு திரும்பவே இல்லை. குண்டான தோற்றத்தில் ஆண்ட்டி ஆக மாறிய அவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டது.

இந்நிலையில் காதி படத்தில் அவர் நடித்திருக்கிறார். ஆனால் படத்தில் பழைய தோற்றத்தில் ஒல்லியாக அவர் காணப்பட்டாலும் அது அவரது உண்மையான தோற்றம் இல்லை. சிஜி தொழில்நுட்பம் மூலம் அவர் படத்தில் ஒல்லியாக தெரிகிறார். ஆனால் உண்மையில் இன்னும் அவர் குண்டாக தான் இருக்கிறார். அதனால்தான் அவர் பொது இடங்களுக்கு குறிப்பாக காதி படத்தின் பிரமோசனுக்கு கூட வரவில்லை. மேலும் காதி படத்தின் ஷூட்டிங் போது கூட இந்த தகவல் வெளியே தெரியக்கூடாது என படக்குழுவினர் மொபைல் போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்