- Advertisement -
Homeபொழுதுபோக்குSTR -க்காக மொத்தமா எறங்கனாரு TR.. அந்த பட்டு இபப்டி தான் உருவானது.. ரகசியம் பகிர்ந்த...

STR -க்காக மொத்தமா எறங்கனாரு TR.. அந்த பட்டு இபப்டி தான் உருவானது.. ரகசியம் பகிர்ந்த தமன்

- Advertisement -

பாசமலர்கள் படத்திற்குப் பின் அண்ணன், தங்கச்சி சென்டிமெண்ட் படங்களுக்கு பெயர் பெற்றவர் விஜய டி. ராஜேந்தர். இவரை ரசிகர்கள் டி.ஆர் என அழைப்பதுண்டு. ஒரு தலை ராகம் மூலம் இயக்குநராக அறிமுகமான டி.ஆர், முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை பெற்றார். இவர் படங்களை இயக்குவதோடு, இசை அமைப்பது, பாடல் எழுதுவது என பன்முகத் திறனோடு வலம் வந்தார்.

அது மட்டுமல்லாது இவரது படங்களில் இடம்பெறும் அடுக்குமொழி வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். திரையில் பேசினாலும் சரி, மேடையில் பேசினாலும் சரி, பொது இடத்தில் பேசினாலும் சரி டி.ஆர் வார்த்தைகளை கோர்த்து அடுக்கு மொழியில் அளிக்கும் பதிலுக்காக பலரும் காத்திருப்பார்கள். இவர் தனது படங்களில் மட்டுமல்லாது பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடுவதுண்டு.

- Advertisement -

அவ்வாறு தனது மகனும் நடிகருமான சிம்புவின் நடிப்பில் வெளியான ‘ஒஸ்தி’ படத்தில் இடம்பெற்றிருந்த கலாசலா குத்து பாடலை டி.ஆர் பாடியிருந்தார். இப்பாடல் உருவான விதம் குறித்து படத்தின் இசையமைப்பாளர் தமன் பேட்டி ஒன்றில் மனம் திறந்திருந்தார்.

அந்தப் பாடலை உருவாக்கியபோது டி.ஆர் மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி ஆகியோர் அருமையாக வேலை செய்தனர். இரண்டு பேரும் பல எபெக்ட்டுகள் கொடுத்து என்ஜாய் செய்து பாடினார்கள். கலாசா என்னும் ஸ்டூடியோவில் இந்தப் பாடலை பதிவு செய்தோம். அதனாலயே கலாசலா என்றே பாடல் அமைந்துவிட்டது.

- Advertisement -

படத்தின் புரொடியூசர் ஹிந்தி பாடலை ரீமேக் செய்ய சொன்னார். முதன்முறையாக சிம்பு படத்தில் பணியாற்றும் நான் ஏன் ஹிந்தி பாட்டை ரீமேக் பண்ணனும். மன்மதன், சிலம்பாட்டம் படங்களை பார்த்து மெண்டலாகி சிம்புவுடன் எப்போது படம் பண்ணுவேன் என வெறித்தனமாக சுத்திட்டு இருந்தேன். அப்புறம் எப்புடியோ அந்த பாடலை எடுத்தோம். வாலி சார் ஒரு மணி நேரத்தில் எழுதி கொடுத்துட்டார். பின்னர் ஸ்டூடியோல ரெக்கார்டு பண்றப்ப டி.ஆர் சாரும், எல்.ஆர். ஈஸ்வரி மேம் இறங்கி வேலை செஞ்சாங்க. அந்த பாடல் நல்லா வந்துச்சு என்றார்.

மேலும் தனது தந்தை எல்.ஆர். ஈஸ்வரியின் மிகப்பெரிய ரசிகன் என்பதை அவரிமே கூறியதாக சொன்ன தமன், எல்.ஆர். ஈஸ்வரியை திருமணம் செய்ய கூட தனது தந்தை விரும்பியதாக கூறினார்.

மாஸ் பாடல்கள், ஐட்டம் பாடல்கள் எப்போது வெற்றியடையும் என்றே தெரியாது. மக்கள் எப்போதும் மாஸ் தான். இப்போது மக்களின் மனநிலை மெலோடி பாடல்களை விட மாஸ் பாடல்களையே விரும்புகிறார்கள். அனைவரும் பார்டி செய்யவே விருப்பப்படுகிறார்கள். மெர்சிடிஸ் பென்சில் போகும் நபர் கூட மெலோடி பாடல்களை விட மாஸ் பாடல்களை கேட்கவே விரும்புவார் என்றார்.

- Advertisement -

சற்று முன்