- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் மலையாள சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லையா? - வெப் சீரிஸில் நடிக்க வந்த ...

தமிழ் மலையாள சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லையா? – வெப் சீரிஸில் நடிக்க வந்த நடிகை பாவனா!

- Advertisement -

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை பாவனா. அதன் பிறகு வெயில் தீபாவளி கூடல் நகர் ஜெயம் கொண்டான் நடிகர் அஜீத்குமாருடன் அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தமிழில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சோனி விழா டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நோட்புக் 90ஸ் காதல் பிளாஷ்பேக் என்ற வெப் தொடரில் நடிகை பாவனா நடிக்கிறார். இந்த தொடர் நவம்பர் 23ம் தேதி முதல் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. பின்னர் இந்த தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது. சினிமாவில் வாய்ப்பில்லாத பாவனா, வெப் சீரிஸில் நடிக்க வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சற்று முன்