- Advertisement -
பழைய கருப்பு வெள்ளை படங்களில் காமெடி கேரக்டரில் நடித்தவர் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன். நடிகர்கள் விவேக் வடிவேலு போன்றவர்களுடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் காக்கா ராதா கிருஷ்ணன் இணைந்து நடித்தவர். குறிப்பாக வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலுடன் நடித்திருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை இளம் வயதில் நாடகக் குழுவில் சேர்த்து விட்டு அவரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதே மூத்த நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் தான் என்பது சினிமா ரசிகர்கள் பலரும் அறியாத ஒரு முக்கியமான தகவலாக இப்போது வெளியாகி உள்ளது.





