- Advertisement -
ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் வில்லனாக ரசிகர்களை மிரட்டியவர் நடிகர் ஆனந்தராஜ். இப்போதும் அவர் தமிழ் படங்களில் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதற்கிடையே சூர்யவம்சம் சிம்மராசி படங்களில் அவர் நடித்த கதாபாத்திரம் ஏஐ வீடியோவாக வைரலாகி வருகிறது. அதிலும் தோத்துக்கிட்டே இருக்கியேடா? அவ கொப்புரானே உங்கப்பன் தாமிர பரணி தண்ணீல தலைமுழுக என்ற ஏஐ வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் மகிழ்ச்சி தெரிவித்த நடிகர் ஆனந்தராஜ், இப்பவும் ரசிகர்கள் என்னை மறக்காமல் இப்படி செய்வது சந்தோஷம்தான். ஆனால் யாரையும் அவமானப்படுத்தவோ அசிங்கப்படுத்தவோ இல்லாத வகையில் இந்த ஏஐ வீடியோக்களை வெளியிடுங்கள் என்று ஆனந்தராஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.





