- Advertisement -
Homeபொழுதுபோக்குகல்கி 2898 ஏடி படத்தில் இருந்து நீக்கப்பட்ட பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே - முக்கிய...

கல்கி 2898 ஏடி படத்தில் இருந்து நீக்கப்பட்ட பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

- Advertisement -

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் தீபிகா படுகோனே அமிதாப்பச்சன் கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவான படம் கல்கி 2898 ஏடி. இந்த படம் கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஷூட்டிங் விரைவில் துவங்க இருக்கிறது.

அதற்கான முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடந்து வரும் சூழலில், கல்கி 2898 ஏடி இரண்டாம் பாகத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிக்கவில்லை என அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் விஜயாந்தி மூவிஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து விஜயாந்தி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, கல்கி 2898 ஏடி படத்தின் அடுத்த பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்க மாட்டார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். கவனமாக பரிசீரித்த பிறகு தீபிகாவும் கல்கி படக்குழுவும் தனித்தனி பாதையில் செல்ல முடிவு செய்து இருக்கிறோம்.

முதல் பாகத்தை உருவாக்கும் நீண்ட பயணம் இருந்த போதிலும் எங்களால் ஒரு கூட்டணியை கண்டுபிடிக்க முடியவில்லை. கல்கி போன்ற ஒரு படம் அந்த அர்ப்பணிப்புக்கும் இன்னும் பலவற்றுக்கும் தகுதியானது. தீபிகாவின் எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனால் கல்கி முதல் பாகம் எடுக்கும் போதே 2ம் பாகத்தின் 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஒரு தகவல் உள்ளது. அதில் தீபிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை போதுமான அளவுக்கு எடுத்து இருந்ததால் அதனை மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே சந்தீ்ப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க இருந்த ஸ்பிரிட் படத்தில் இருந்தும் தீபிகா விலகியிருந்தார். அந்தப் படமும் இன்னும் ஷூட்டிங் துவங்கப்படவில்லை.

கடந்த ஆண்டு குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் நடிக்க 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் மட்டுமே ஒதுக்கி வேலை செய்வேன் என்ன தீபிகா படுகோனே கண்டிஷன் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் காரணமாக ஸ்பிரிட் படக்குழுவுக்கும் அவருக்கும் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அவர் அந்த படத்தில் இருந்து விலகினார். இப்போது கல்கி ஏடி 2ம் பாகத்திலும் அவர் நீக்கப்பட்டு இருப்பது தீபிகாவின் கண்டிஷன் காரணமாக இருக்கலாம் என்று பாலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்