நடிகர் விஜய் இப்போது, த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வெங்கட்பிரபு டைரக்ட் செய்துள்ள இந்த படத்தின் ஷூட்டிங், இப்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதற்காக துபாய் வழியாக ரஷ்யா சென்றுள்ள விஜய், 16 நாட்கள் அங்கு நடக்கும் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். அங்கு அவருக்கான காட்சிகளே அதிகமாக படமாக்கப்படுகின்றன.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை அறிவித்துள்ள நடிகர் விஜய், த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை தொடர்ந்து தனது 69 படத்தில் மட்டுமே நடித்துவிட்டு, பின்பு நடிப்புலகை விட்டு விலகி விடுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். எனவே, தனது 69 படத்தை 2024 டிசம்பருக்குள் முடித்துவிடவும் திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே விஜய் 69 படத்தை இயக்கப் போவது யார் என்ற மிகப்பெரிய சஸ்பென்ஸ் 2 மாதங்களாக நீடித்த நிலையில், இறுதியில் துணிவு, வலிமை, தீரன் அதிகாரம் 1, சதுரங்கவேட்டை போன்ற தரமான படங்களை இயக்கிய எச் வினோத் தான் இயக்குனர் என விஜய் இறுதியில் முடிவாக தெரிவித்து உறுதிபடுத்தி விட்டார்.
இந்நிலையில், விஜய் 69 படத்தின் கதை குறித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது எச் வினோத், அரசியல் சார்ந்த படங்களை தருவதில் அதிக ஆர்வம் கொண்டவர். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அரசியல் படமாக இருந்தது ஷங்கர் இயக்கிய முதல்வன் படமும், மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை படமும்தான்.
ஏற்கனவே, நடிகர் விஜய் அமைதிப்படை அமாவாசை கேரக்டர் சத்யராஜ் போல ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தார். இதனிடையே முதல்வன் படத்தையும், அமைதிப்படை படத்தையும் போல, ஒரு தரமான அரசியல் படத்தையே விஜய் 69 படத்தின் கதையாக உருவாக்கி இருக்கிறார் எச் வினோத். அதனால் கதையை கேட்டவுடன் சந்தோஷமாக தளபதி டபுள் டிக் அடித்திருக்கிறார்.
ஏற்கனவே அரசியல் படங்களை ரிலீஸ் செய்வதில் ஆளுங்கட்சி பல பஞ்சாயத்துகளை கிளப்பும் என்றாலும், அதற்கெல்லாம் பயப்பட்டாமல் இதே மாதிரி எடுங்க எனவும் விஜய் அனுமதி தந்துள்ளார். மேலும், த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் சிறிதும் அரசியல் கிடையாது. ஆனால் விஜய் 69 படத்தில் காட்சிக்கு காட்சி அரசியல்தான் என்பதால் எச் வினோத், விஜய் நடிப்பில் தரமான சம்பவமாக விஜய் 69 உருவாக போகிறது. அதுவும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் விஜய்க்கு சரவெடியாக அமைய வாய்ப்புள்ளது.





