- Advertisement -
Homeபொழுதுபோக்குஓடிடி நிறுவனம் போட்ட கண்டிஷன், இயக்குனர் மணிரத்னம் அப்செட் - இப்படி ஒரு சம்பவமும் நடந்துவிட்டதா?

ஓடிடி நிறுவனம் போட்ட கண்டிஷன், இயக்குனர் மணிரத்னம் அப்செட் – இப்படி ஒரு சம்பவமும் நடந்துவிட்டதா?

- Advertisement -

ஆரம்பத்தில் தியேட்டர்களில் படம் பார்க்க வரும் ரசிகர்களை மட்டுமே நம்பி திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு சாட்டிலைட் உரிமம் டிஜிட்டர் உரிமம் என நான் தியேட்டரிக்கல் மூலம் கிடைக்கும் பெரிய வருமானமும் படத் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் லாபத்தை கொடுத்தது.

அந்த வகையில் சாட்டிலைட் டிவி சேனல்களில் படங்களை வெளியிடும் உரிமம் பெற பல கோடி ரூபாய் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்து வருகிறது. அதே போல் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடுவதற்கு டிஜிட்டல் உரிமம் வாயிலாகவும் பெரிய அளவில் பல கோடிகளில் வியாபாரம் நடக்கிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறது.

- Advertisement -

ஆனால் ஆரம்பத்தில் சாதாரண படங்களை கூட பல கோடி ரூபாய் விலை கொடுத்து டிஜிட்டல் உரிமம் வாங்கிய முன்னணி ஓடிடி நிறுவனங்கள், பலத்த நஷ்டங்களை சந்தித்த நிலையில் இப்போது டிஜிட்டல் ரைட்ஸ் விலையை தாறுமாறாக குறைத்து விட்டது. பெரிய நட்சத்திர ஹீரோக்களின் படங்களை கூட அதிக விலை கொடுத்து வாங்குவதில்லை.

இயக்குனர் ஹீரோ இசையமைப்பாளர் என்ற காம்பினேஷனை பார்த்து ஏராளமான விலை கொடுத்து படங்களை வாங்கிய ஓடிடி நிறுவனங்கள், இப்போது படத்தின் கதை என்ன, எந்த மாதிரியான கண்டென்ட், ஓடிடியில் வெளியிட்டால் நல்ல வரவேற்பு கிடைக்குமா என்று யோசித்து ஆலோசித்துதான் படங்களை வாங்குகிறது.

- Advertisement -

இந்த சூழலில் இயக்குனர் மணிரத்னம் இப்போது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார். சமீபத்தில் இந்த படம் குறித்து டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் பேச முன்னணி ஓடிடி தளம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை அணுகி பேசியிருக்கிறார். அவர்கள் தரப்பில், படத்தின் கதையை முதலில் சொல்லுங்கள், ஸ்கிரிப்ட் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.

இதனால் அப்செட் ஆன இயக்குனர் மணிரத்னம், நான் எவ்வளவு பெரிய இயக்குனர். என்னிடமே கதை ஸ்கிரிப்ட் கேட்கிறார்களே என்று விரக்தியில் புலம்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கிய தக்லைஃப் மற்றும் ரெட்ரோ விடாமுயற்சி குட்பேட் அக்லி போன்ற படங்களை அதிக விலை கொடுத்த வாங்கிய ஓடிடி நிறுவனங்கள், மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த நிலையில் யாராக இருந்தாலும் கதை ஸ்கிரிப்ட் கேட்பதில் தவறில்லை என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்