கடந்த 1980 90களில் தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் கவர்ச்சி நடனம் என்பது நிச்சயமாக இருக்கும். வில்லன்கள் சந்திக்கும் ஓட்டலில் வண்ண விளக்குகள் ஒளிரும் ஒரு பெரிய ஹாலில் டைனிங் டேபிள்களுக்கு மத்தியில் அனுராதா சில்க் ஸ்மிதா டிஸ்கோ சாந்தி குயிலி என யாராவது ஒரு நடிகை ஜிகினா ஆடையில் கவர்ச்சி நடனம் ஆடுவார்கள். அந்த காலத்தில் அதுதான் ஐயிட்டம் சாங் ஆக இருந்தது.
நாளடைவில் குஷ்பு ரோஜா ரம்பா நக்மா போன்ற நடிகைகள் வந்த பிறகு அந்த கவர்ச்சி நடனத்துக்கும் அவர்களே பொறுப்பு ஏற்றுக்கொண்டு கவர்ச்சி ஆட்டம் ஆடத் துவங்கி விட்டார்கள். இப்போது அதுவே ஐட்டம் சாங் என்ற பெயரில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட மட்டுமே கோடிக்கணக்கில் சில நடிகைகள் சம்பளம் வாங்கிக் கொள்கின்றனர்.
அப்படி 1980 90களில் கவர்ச்சி நடனம் போட்ட நடிகைகளில் ஒருவர்தான் டிஸ்கோ சாந்தி. பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் அவர் நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் அதுவும் கவர்ச்சியான கேரக்டராக தான் இருக்கும். குறிப்பாக ஹீரோக்களை வசியப்படுத்தும் ஒரு மாதிரியான பெண் என்றால் அதுபோன்ற கேரக்டர்களில் சில்க் ஸ்மிதா டிஸ்கோ சாந்தி போன்றவர்களை அன்றைய இயக்குனர்கள் கமிட் செய்து விடுவார்கள்.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை டிஸ்கோ சாந்தி இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். நடிகர் ராகவா லாரன்ஸ் தம்பி நடிக்கும் புல்லட் என்ற படத்தில் நடிகை டிஸ்கோ சாந்தி ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இதில் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பாக அவர் வரும் கேரக்டர் அந்த படத்துக்கே ஒரு டர்னிங் பாயிண்ட் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
டிஸ்கோ சாந்தி மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்றவுடன் சில இயக்குனர்கள் அவரை தொடர்பு கொண்டு தங்களது படங்களில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் அதுவும் கவர்ச்சியான வேடமாகவும் கிளாமர் ரோலாகவும் இருந்ததால் டிஸ்கோ சாந்தி அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
தன்னை நடிக்க அழைத்த இயக்குனர்களிடம் நடிகை டிஸ்கோ சாந்தி கூறுகையில், என்னை அது மாதிரியான கிளாமர் கேரக்டர்களில் நடிக்க அழைக்காதீர்கள். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். நாளைக்கே அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டால் அடுத்த ஆண்டில் நான் பாட்டியாகி விடுவேன். இப்படிப்பட்ட படங்களில் நடித்தால் என் சம்பந்தி வீட்டுக்காரங்க எல்லாம் கோபித்து கொள்வார்கள் என்றும் கூறியதாக வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.





