- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது மட்டுமே என் அடையாளம் அல்ல, அது இல்லாமலும் என்னால் சந்தோஷமாக வாழ முடியும் -...

அது மட்டுமே என் அடையாளம் அல்ல, அது இல்லாமலும் என்னால் சந்தோஷமாக வாழ முடியும் – நடிகை திவ்யா ஸ்பந்தனா ஓபன்டாக்!

- Advertisement -

சினிமாவில் பிரபலமாக உள்ள நடிகர் நடிகைகள் சிலர் திருமண வயது கடந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகின்றனர். இதில் 50 வயதுகளை கடந்த நடிகர் நடிகைகளும் இருக்கின்றனர். இனி அவர்கள் திருமணம் செய்துக் கொள்வதில்லை என்ற தீர்க்கமான முடிவில் இருந்து வருகின்றனர்.

தமிழில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக குத்து என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவரை குத்து ரம்யா என்றும் சினிமா ரசிகர்கள் அழைப்பது வழக்கம். குத்து படத்தை தொடர்ந்து பொல்லாதவன் வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் திவ்யா ஸ்பந்தனா நடித்தார்.

இவரது நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரிதளவில் வரவேற்பு பெற்றது. சாண்டல்வுட் குயின் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட குத்து ரம்யா தெலுங்கிலும் நடித்தார். ஆனால் சினிமாவில் இருந்து ஒரு கட்டத்தில் அவர் ஒதுங்கினார். அரசியல் ஆர்வம் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

கடந்த 2013ம் ஆண்டு மாண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் எம்பி யாக வெற்றி பெற்றார். பிறகு அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி உள்ளார் நடிகை குத்து ரம்யா. சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் எதிர்காலம் குறித்து அவ்வப்போது வெளிப்படையான கருத்துக்களை ரசிகர்களுடன் அவர் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர், திருமணம் மட்டுமே ஒருவரின் அடையாளத்தை தீர்மானிப்பதில்லை என்றும் திருமணம் செய்து கொள்ளாமலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே மிகவும் முக்கியம் என்றும் திவ்யா ஸ்பந்தனா கூறி இருக்கிறார். சமீபத்தில் நேர்காணலில் பேசிய நடிகை திவ்யா ஸ்பந்தனா கூறியதாவது, திருமணம் மட்டுமே என்னுடைய அடையாளத்தை தீர்மானித்து விடாது. திருமணம் செய்து கொள்ளாமல் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதுதான் மிகவும் முக்கியம். நல்ல நட்பு ஒரே மாதிரியான சிந்தனை மற்றும் ஆழமான புரிதல் இருந்தால் திருமணம் ஒரு நல்ல முடிவாக இருக்கும். ஆனால் எனக்கு பொருத்தமான நபரை நான் இன்னும் சந்திக்கவில்லை என்று நடிகை திவ்யா ஸ்பந்தனா கூறியிருக்கிறார். அவரது இந்த வெளிப்படையான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சற்று முன்