- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் மோகன்லால் - மீனா நடித்த திரிஷியம் 3 படம் குறித்து அப்படி ஒரு தகவலை...

நடிகர் மோகன்லால் – மீனா நடித்த திரிஷியம் 3 படம் குறித்து அப்படி ஒரு தகவலை சொன்ன இயக்குனர் ஜீத்து ஜோசப் – அப்செட் ஆன ரசிகர்கள்!

- Advertisement -

மலையாள படங்கள் வெகு எளிதாக ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஏனென்றால் அது யதார்த்த வாழ்க்கையை கொண்ட கதைக்களத்தில் உண்மையான சம்பவங்களை பிரதிபலிக்கிறது. அந்த வகையில் மொபைல் போன் தாக்கத்தால் எந்தவிதமான பாதிப்புகளை எல்லாம் எதிர்கொள்ள நேரிடுகிறது என்பதை சமூக பொறுப்புணர்வோடு சொன்ன படம்தான் திரிஷியம்.

ஒரு அழகான குடும்பம். அதில் 2 மகள்களுடன் பெற்றோர் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். பிக்னிக் சென்ற இடத்தில் குளியலறைக்குள் இருந்த மகளின் வீடியோவை எடுத்துவிட்டு வீட்டுக்கே வந்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டுகிறான் ஒரு வாலிபன். போலீஸ் டிஜிபி மகன். அவனை தவறுதலாக மகள் அடித்துக் கொன்று விடுகிறாள். அந்த குடும்பத்தை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற படத்தின் ஹீரோ போராடுவதே கதை.

- Advertisement -

மலையாளத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிகை மீனா நடித்த படம் திரிஷியம். இந்த மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படமாகும். இந்த படத்தை தமிழில் கமல்ஹாசன் – கௌதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்து ஜீத்து ஜோசப் டைரக்ட் செய்திருந்தார். தமிழிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

முதல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து திரிஷியம் படத்தின் 2ம் பாகத்தையும் ஜீத்து ஜோசப் இயக்கினார். இந்த 2 பாகத்திலும் மோகன்லால் மீனா நடித்தனர். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இப்போது மீண்டும் மோகன்லால் மீனா நடிப்பில் திரிஷியம் 3 படம் உருவாகியுள்ளது. இந்த படம் ஸம்மர் வெளியீடாக வரும் மே மாதம் திரைக்கு வர உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் திரிஷியம் 4ம் பாகம் படமும் உருவாகும் என்று சினிமா ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துள்ளனர். ஏனெனில் 2 பாகங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 3ம் பாகமும் உருவாகி வருகிறது. தொடர்ந்து 4ம் பாகமும் வெளியாக வாய்ப்புள்ளதாகவே ரசிகர்கள் கருதினர். ஆனால் அதற்கு நேர்மாறான ஒரு தகவலை இயக்குனர் ஜீத்து ஜோசப் இப்போது கூறியிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் திரிஷியம் 4 படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறியதாவது, திரிஷியம் 3ம் பாகத்துக்கு பிறகு கதையை மேலும் வளர்க்கும் எந்த எண்ணமும் எனக்கு இல்லை. இதற்கு மேல் இந்த கதையை இழுத்தால் சுவாரசியம் இருக்காது, அப்புறம் சுவாரசியம் குறைந்து விடும். அதனால் 3ம் பாகத்தோடு திரிஷியம் முடிவடைகிறது என்று ஜீத்து ஜோசப் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்