கேப்டன் விஜயகாந்த் நடித்த வானத்தை போல மரியாதை ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்ரமன். ஒரு நேர்காணலில் பேசிய விக்ரமன் கூறியதாவது, நான் மட்டும் இல்ல விஜயகாந்த் நடித்த 150 படங்களின் எந்த இயக்குனர் போய் கதை சொன்னாலும் அந்த கதை பிடிக்கலைன்னு அவர் திருப்பி அனுப்பினதே கிடையாது. அவருக்கு கதை பிடிக்கலைன்னா கூட நடிப்பார். நம்மளை நம்பி ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் படம் எடுக்குறாங்க. அப்போ அவங்களுக்கு இருக்கிற நம்பிக்கை நமக்கு ஏன் இல்லாம போகணும்? அப்படின்னு நடிப்பார். எவ்வளவு ஒத்துழைக்க முடியுமோ அவ்வளவு ஒத்துழைப்பார். கதை நடிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் தலையிடவே மாட்டார். ஒருநாள் கூட வந்து அவர் மானிட்டர் பார்த்தது கிடையாது. சொல்றதை நடிப்பார். அப்புறம் வெளியே போய் உட்கார்ந்துக்குவார். இப்படி ஒரு நடிகரை பார்க்கவே முடியாது என்று விக்ரமன் கூறியிருக்கிறார்.





