- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்புவுடன் நடிப்பதற்காக ஹிந்தி திரை உலகில் இருந்து வரும் இரண்டு நடிகைகள்... லைக்ஸ்களை அள்ளித் தெளிக்கும்...

சிம்புவுடன் நடிப்பதற்காக ஹிந்தி திரை உலகில் இருந்து வரும் இரண்டு நடிகைகள்… லைக்ஸ்களை அள்ளித் தெளிக்கும் எஸ்டிஆர் ரசிகர்கள்…

- Advertisement -

நடிகர் சிம்புவிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பத்து தல திரைப்படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தையே பெற்றது. அடுத்ததாக அவர் இயக்குனர் தேசிங்கு பெரிய சாமியின் கதையில் கமிட்டானார்.

 

- Advertisement -

தேசிங்கு பெரியசாமி இதற்கு முன்னதாக துல்கர் சல்மானை வைத்து கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதன் பிறகு அவர், ரஜினிகாந்திற்காக கதை எழுதி வந்தார். ஆனால் அந்த கதை சூப்பர் ஸ்டாருக்கு பிடிக்காமல் போனது.

 

- Advertisement -

இந்த நிலையில், தேசிங்கு பெரியசாமி சிம்புவிடம் கதை கூற அது ஓகே ஆனது. இந்த திரைப்படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வரலாற்று பின்னணி ரீதியில் மிகப்பெரும் செலவில் இந்த திரைப்படம் உருவாக இருப்பதால், இதற்கான சூட்டிங் பணிகள் தாமதமாகிக் கொண்டே வந்தன.

 

ஆறு மாதத்திற்கு முன்பு அறிவிப்பு வெளியானாலும், ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளிலேயே தேசிங்கு பெரியசாமி கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் குறித்த போஸ்டர் வெளியானது. இதில், சிம்பு இரட்டை வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்திற்காக நீண்ட முடியுடன் சிம்பு காட்சியளித்தார்.

 

இப்படியான சூழலில் அவர் திடீரென தக்லைப் படத்தில் நடிக்க சென்று விட்டார். முதலில் அந்தப் படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர்கள் வெளியேறியதால், சிம்புவும் அசோக் செல்வனும் படத்திற்குள் வந்தனர். இந்த சூழலில், கமல்ஹாசன், சிம்பு தொடர்பான காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே சிம்புவின் 48வது படம் குறித்த பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சிம்புவுக்கு இரண்டு கதாநாயகிகள் ஜோடியாக நடிக்கிறார்களாம். கியாரா அத்வானி மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கின்றனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்விக்கு இது முக்கியமான திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்