- Advertisement -
Homeபொழுதுபோக்குபெத்தி படத்தில் கவர்ச்சியாக காட்டப்பட்ட நடிகை ஜான்வி கபூர் கேரக்டர், விளாசித் தள்ளிய நடிகை கங்கனா...

பெத்தி படத்தில் கவர்ச்சியாக காட்டப்பட்ட நடிகை ஜான்வி கபூர் கேரக்டர், விளாசித் தள்ளிய நடிகை கங்கனா ரெனாவத்!

- Advertisement -

இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிகை ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பெத்தி. இந்த படத்தில் சிவராஜ்குமார் திவ்யேந்து ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகை ஜான்வி கபூர் அச்சியம்மா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார்.

ஜான்வி கபூர் கதாபாத்திரம் காட்டப்பட்ட விதம் தவறான கேமரா கோணங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, துன்புறுத்தல் வசனங்கள் என ஜான்வி கபூரின் கேரக்டர் இணையதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணின் ததாபாத்திரத்தை எவ்வாறு எழுத வேண்டும் எப்படி திரையில் காட்ட வேண்டும் என்பது குறித்த விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்தன.

- Advertisement -

இதையடுத்து பெத்தி படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா தனது வலைதள பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில் நடிகை மற்றும் பாஜக எம்பி கங்கனா ரெனாவத் ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது கூறியதாவது, நீங்கள் ஒரு லோக்கல் ரயிலில் பயணித்தாலும் கூட அங்கு பெண்கள் ஒரு கவர்ச்சி பொருளாக தான் பார்க்கப்படுகிறார்கள்.

எனவே திரைப்படங்களில்தான் அவர்கள் அவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறான ஒன்று. நீங்கள் லோக்கல் ரயிலில் அல்லது உள்ளூர் பஸ்சில் பயணித்தால் அங்கு நடக்கும் தள்ளுமுள்ளுகளும் இடிபாடுகளும் அதைத்தான் காட்டுகின்றன. இது பொதுவாக ரோடுகளிலும் கூட நடக்கிறது.

- Advertisement -

ஆனாலும் திரைப்படங்கள் பெண்களை காட்டும் விதம் மிகவும் கொடூரமானதாகவே இருக்கிறது. கவர்ச்சி பாடல்களாக இருக்கட்டும் அல்லது சர்க்காய் லோ காட்டியா போன்ற பாடல்களாக இருக்கட்டும். எல்லாமே அவ்வாறு தான் இருந்திருக்கின்றன. பெண்களை மிகவும் ஆபாசமான முறையில் திரையில் காட்டுகின்றன.

சில நேரங்களில் ஒரு பெண்ணை கவர்ச்சியாக காட்டுவதற்கும் ஆபாசத்திற்கும் பெண் குலத்திற்கு இழைக்கப்படும் முழுமையான அநீதிக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு அறிந்தோ அல்லது அறியாமலோ மங்கிப் போய்விடுகிறது அப்படித்தான் என்று நான் நினைக்கிறேன் என்று கங்கனா ரெனாவத் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்