தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக நடித்து வந்தவர் நடிகர் விஜய். அவர் கடைசியாக நடித்து வெளியான 68வது படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். அந்த படத்தைத் தொடர்ந்து இயக்குனர் எச வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 69வது படம் ஜனநாயகன். இதுதான் அவரது கடைசி படமாக உருவானது. இந்த படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் என்ற பெங்களூருவைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் ஐந்து மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கி போனது. ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் இப்போது இந்த படம் வெளியாகும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. படத்தில் 13 இடங்களில் கட் கொடுக்கப்பட்டு அந்த காட்சிகளை மாற்றியுள்ளனர். 43 நொடிகள் வெட்டப்பட்ட பிறகு படத்தின் நீளம் 180 நிமிடங்கள் என தணிக்கை வழங்கப்பட்டுள்ளது. விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே மமீதா பைஜூ, பாபி தியோல் நரேன் பிரியாமணி கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜனநாயகன் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய படம் தணிக்கை சான்று பிரச்சனையால் 5 மாதங்களாக வெளியாகவில்லை. இப்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இந்த படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா சமீபத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களிலேயே படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகி இப்போது அது உறுதியாகியுள்ளது.
ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. வன்முறை ஆபாச வார்த்தைகளை குறைக்க மொத்தம் 13 இடங்களில் கட் செய்யப்பட்டுள்ளது. தமிழ் ஆங்கில கெட்ட வார்த்தைகளை மியூட் செய்யவும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான எச்சரிக்கை வாசகம் வைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் சண்டைக் காட்சிகளில் ரத்தக்கறை காது அறுபடும் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது.குண்டுவெடிப்பின் போது கால் பறப்பது போன்ற காட்சி நீங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 43 நொடிகள் படத்தின் காட்சிகள் வெட்டப்பட்டு படத்தின் மொத்த நீளம் 180 நிமிடம் அதாவது 3 மணி நேரம் ஓடும் விதமாக ஜனநாயகன் படம் வெளியாகியுள்ளது. தணிக்கை சான்றிதழ் பிரச்சனை தீர்ந்ததால் இந்த படம் மிக விரைவில் உறுதியாக வெளியாகும். படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்க உள்ளது. விஜய் நடித்த 69 படங்களில் அவரது கடைசி படத்துக்கு முதல் முறையாக ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.





