- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் அன்று ரிலீஸ் செய்யப்படுகிறதா? நடிகர் சூர்யா படத்துடன் மோதுகிறதா?...

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் அன்று ரிலீஸ் செய்யப்படுகிறதா? நடிகர் சூர்யா படத்துடன் மோதுகிறதா? லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். இந்தப் படம் கடந்த ஐந்து மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கி கிடந்தது. சென்சார் சர்டிபிகேட் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஜனநாயகன் படம் திரைக்கு வருவது தடைப்பட்டது. எனினும் இப்போது அந்த படத்துக்கு சென்சார் போர்டு தரப்பில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் இதுவரை 69 படங்களில் நடித்துள்ள நிலையில் அவர் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்படுவது இதுதான் முதல் தடவை. அதுவும் அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விஜய் நடித்த பல படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட போதிலும் இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனால் ஜனநாயகன் படம் மிக விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

வருகிற 16ம் தேதி அல்லது 23ம் தேதி என இரண்டு தேதிகளில் ஏதாவது ஒரு நாள் இந்த படம் ரிலீஸ் செய்யப்படலாம் என்று தகவல் பரவி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 13ம் தேதி தான் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற படம் வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி ரிலீஸ் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த முறை நடிகர் விஜய் நடிகர் சூர்யா நேரடியாக களத்தில் மோத அதிக வாய்ப்புள்ளது. வழக்கமாக சூர்யா நடித்த படங்கள் பலத்த தோல்வியை சந்தித்து வந்த நிலையில், அதுபோன்ற பழைய சூழலாக இருந்தால் நிச்சயமாக ஜனநாயகன் படத்துடன் சூர்யா படம் மோத வாய்ப்பில்லை. ஆனால் கருப்பு படம் மிகப்பெரிய வெற்றியை குவித்து பிளாக்பஸ்டர் படமாக இருந்தது. அந்த கருப்பு வெற்றி தந்த தைரியத்தில் துணிச்சலில் விஜய் படத்துடன் சூர்யா படம் மோத தயாராக இருப்பதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

எப்படி இருப்பினும் நடிகர்கள் விஜய் சூர்யா நடித்த படங்கள் திரையில் மோதுவது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை ஏராளமான மக்கள் பார்த்து விட்டதாக கூறப்படும் நிலையில், இப்போது அதிக வசூலை குவிக்குமா என்பதும் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

ஆனால் இதுவரை படத்தை தயாரித்த கேவிஎன் புரொடக்சன்ஸ் சார்பில் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை. இந்த படத்தின் தேதியை உறுதியாக அறிவித்த பின்னர்தான் இந்த படம் காரணமாக ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 6 படங்களின் ரிலீஸ் தேதி உறுதியாகி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்