- Advertisement -
Homeபொழுதுபோக்குபெண்களை ஒழுக்கம் கெட்டவர்களாக படங்களில் காட்டுகின்றனர்… வானரன் பட விழாவில் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய நடிகை...

பெண்களை ஒழுக்கம் கெட்டவர்களாக படங்களில் காட்டுகின்றனர்… வானரன் பட விழாவில் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய நடிகை கஸ்தூரி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. ஆத்தா உன் கோவிலிலே ராக்காயி கோயில் இந்தியன் சின்னவர் அமைதிப்படை உடன்பிறப்பு என பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடிகர் சந்தானத்துக்கு அம்மா கேரக்டரில் கஸ்தூரி நடித்திருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக நடிகை கஸ்தூரி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் மேடைகளில் சமூகம் அரசியல் சினிமா சார்ந்த பல கருத்துகளை வெளிப்படையாக பேசி வருகிறார். குறிப்பாக தனது வலைதள பக்கங்களில் சினிமா அரசியல் சமூகம் சார்ந்த தனது கருத்துகளை துணிச்சலாகவும் வெளியிட்டு வருகிறார்.

- Advertisement -

இதற்கிடையே சில மாதங்களுக்கு முன் ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து சர்ச்சையான ஒரு கருத்தை கூறியது பெரிய அளவில் விவகாரமாக மாறி பிரச்னையை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தலைமறைவான நடிகை கஸ்தூரியை போலீசார் ஐதராபாத்தில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்துக்கு பிறகு நடிகை கஸ்தூரி சர்ச்சையான விஷயங்கள் குறித்து பேசுவதை வெகுவாக குறைத்துக்கொண்டு இருக்கிறார். படங்களில் டிவி சீரியல்களில் நடிக்கவும் அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த சூழலில்தான் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடிகை கஸ்தூரியை தனது அம்மா கேரக்டரில் நடிகர் சந்தானம் நடிக்க வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் வானரன் என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இயக்குனர் ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த விழாவில் நடிகை கஸ்தூரி பேசியதாவது, வட இந்தியாவில் தெலுங்கில் வலதுசாரி சிந்தனை படங்கள் வந்து வெற்றி பெறுகின்றன. தமிழகத்திலும் அந்த நிலை மாறும்.

தமிழ் சினிமாவில் ஒரு தரப்பு சிந்தனைகளை கேலி செய்கிறார்கள். ஒரு பிரிவினரை மட்டும் அதிகம் விமர்சனம் செய்கிறார்கள். அந்த பிரிவை சேர்ந்த ஆண்கள் என்றால் காமெடியாக சித்தரிக்கிறார்கள். பெண்கள் என்றால் ஒழுக்கம் கெட்டவர்களாக காண்பிக்கிறார்கள். இது தவறு. இனி பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒரு விலை சின்ன பட்ஜெட் படங்களுக்கு குறைந்த விலை என வைக்க வேண்டும் என நடிகை கஸ்தூரி பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்