- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது யாருக்குமே தெரியாத கிசுகிசு, நடிகர் அரவிந்த்சாமிக்கு என் மேல் கிரஷ் இருந்தது - போட்டுத்...

இது யாருக்குமே தெரியாத கிசுகிசு, நடிகர் அரவிந்த்சாமிக்கு என் மேல் கிரஷ் இருந்தது – போட்டுத் தாக்கிய நடிகை கஸ்தூரி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் பல படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் கஸ்தூரி. ராக்காயி கோயில் ஆத்தா உன் கோயிலிலே இந்தியன் சின்னவர் செந்தமிழ் பாட்டு அமைதிப்படை என பல படங்களில் நடித்தவர். இப்போது பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை கஸ்தூரி கூறியதாவது, நான் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் என்னைப் பற்றி ஒரு கிசுகிசு வந்தது. அந்த கிசுகிசு வந்ததுமே வீட்டில் பெற்றோர் இதுக்கு மேல நீ நடிக்க வேண்டாம். நீ நடிச்சது போதும் என்று சொல்லி எனக்கு திருமண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

- Advertisement -

அந்த நேரத்தில் சரியான வரன் இந்தியாவில் கிடைக்கவில்லை. அதனால் வெளிநாட்டில் மாப்பிள்ளை தேடினார்கள். நான் இந்தியாவில் இருந்திருந்தால் சினிமாவில் தொடர்ந்து நடித்திருப்பேன். இடையில் பிரேக் எடுத்திருக்க மாட்டேன். ஆனால் திருமணத்திற்கு பிறகும் முழுமையாக சினிமாவை விட்டு விலகாமல் தொடர்ந்து தயாரிப்பாளராக பணியாற்றினேன்.

அதன் பிறகு குழந்தைகள் பிறந்ததால் அவர்களுக்காக ஒரு கட்டத்தில் நான் சினிமாவை விட்டு விலகி விட்டேன். நான் ஹீரோயினாக பிஸியாக நடித்து வந்த காலத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகராக இருந்தவர் அரவிந்த்சாமி. அனைவருக்கும் அவர் மீது கிரஷ் இருந்தது. ஆனால் அவருக்கு என் மீது கிரஷ் இருந்தது. இது யாருக்குமே அப்போது தெரியாது.

- Advertisement -

பிறர் என்னைப் பற்றி பல கிசுகிசுக்களை எழுதுகிறார்கள். இப்போது நானே ஒரு கிசுகிசு சொல்கிறேன். தளபதி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு எனக்கு தான் முதலில் வந்தது. ஆனால் அப்போது நான் மிகவும் சின்ன பெண்ணாக இருந்ததால் அந்த வாய்ப்பு போய்விட்டது. இன்று வரை அரவிந்த் சாமியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது என் ஆசையாகவே இருக்கிறது என்று நடிகை கஸ்தூரி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

நடிகர் அரவிந்த் சாமி 1990களில் மிகவும் அழகான ஹீரோவாக இருந்தவர். அவருடன் நடிக்க வேண்டும் என்பது அன்றைய நாயகிகளின் முக்கிய விருப்பங்களில் ஒன்றாக இருந்தது. அரவிந்த் சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்கிற அளவுக்கு பெண்கள் மத்தியில் அவருக்கு கிரஷ் இருந்தது. அப்படிப்பட்ட அரவிந்த் சாமிக்கு தன் மீது கிரஷ் இருந்தது என்று நடிகை கஸ்தூரி கூறியிருப்பது உருட்டா, உண்மையா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்