- Advertisement -
Homeபொழுதுபோக்குசொல்லாமலே படத்தின் நாயகி கௌசல்யா, 46 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்க இப்படி ஒரு காரணமா?...

சொல்லாமலே படத்தின் நாயகி கௌசல்யா, 46 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்க இப்படி ஒரு காரணமா? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள் சிலர் திருமணமே செய்துக்கொள்வது இல்லை. இதில் முன்னணி நடிகர்கள், நடிகைகளும் இருக்கின்றனர். குடும்ப வாழ்வை அவர்கள் விரும்பாமல் போக பல காரணங்கள் இருக்கின்றன. எனினும் பெரும்பாலான ரசிகர்கள், அவர்கள் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகவே விரும்புகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக உள்ள விஷால், சிலம்பரசன் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அதே போல் 50 வயதுகளை கடந்த எஸ்ஜே சூர்யா, நட்டி போன்றவர்களும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. பாகுபலி ஹீரோ பிரபாஸ் 45 வயதாகியும் திருமணம் ஆகவில்லை.

- Advertisement -

அதே போல் நடிகைகளில் சிலர் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. குறிப்பாக பாகுபலி நாயகி அனுஷ்கா இன்னும் முரட்டு சிங்கிளாக இருக்கிறார். காமெடி நடிகை கோவை சரளா திருமணம் செய்யவில்லை. அதே போல் நடிகை சித்தாரா திருமணம் ஆகாதவர். அந்த வரிசையில் சொல்லாமலே பட நாயகி கௌசல்யாவும் 46 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கௌசல்யா. அவர் நடித்த படங்களில் குறிப்பாக சொல்லாமலே பூவேலி வானத்தை போல நேருக்கு நேர் பிரியமுடன் ஏழையின் சிரிப்பில் உன்னுடன் மனதை திருடி விட்டாய் போன்ற பல படங்களில் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

- Advertisement -

இப்போது 46 வயதுகளை கடந்தும் அவர் திருமணம் செய்யாமல் இருப்பது, ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய நடிகை கெளசல்யா, அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். கௌசல்யா கூறுகையில், சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த போது, ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் அது சில காரணங்களால் திருமணத்தில் முடியாமல் போனது.

இப்போது குடும்பம், குழந்தைகள் என ஒரு பொறுப்பான வாழ்க்கையை சிறப்பாக என்னால் கையாள முடியுமா என்பது தெரியவில்லை. 46 வயதாகியும் இன்னும் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க, இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று, கௌசல்யா வெளிப்படையாக கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்