- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருமணத்துக்கு பிறகு அந்த காட்சியில் நடிக்க டபுள் ஓகே சொன்ன விஜய் பட நடிகை -...

திருமணத்துக்கு பிறகு அந்த காட்சியில் நடிக்க டபுள் ஓகே சொன்ன விஜய் பட நடிகை – ஆனா சிவகார்த்திகேயன் பட நாயகி நோ சொல்லி இருக்கிறாரே?

- Advertisement -

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அண்ணத்த பைரவா சர்கார் தொடரி ரஜினிமுருகன் ரெமோ நடிகையர் திலகம் ரகுதாதா சைரன் 108 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கேரக்டரில் நடித்த கீர்த்திக்கு சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்தது.

தமிழில் மட்டுமின்றி நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் தனது நெருங்கிய நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார். கோவாவில் இவர்களது திருமணம் விமரிசையாக நடந்தது.

- Advertisement -

திருமணம் ஆன பிறகும் நடிகை கீர்த்தி சுரேஷ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொள்ளவில்லை. அவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வருகின்றன. ஆனால் நாயகியை மையப்படுத்திய கதைகளில் அவர் நடித்த பல படங்கள் பலத்த ஏமாற்றத்தை தந்துவிட்டன. அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா என்ற படம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவர உள்ளது.

இதற்கிடையே தற்போது தெலுங்கில் ரவி கிரண் கோலா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ரவுடி ஜனார்த்தனன் என்ற படம் உருவாகிறது. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க கமிட்டாகி உள்ளார். ஆனால் இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க நடிகை ருக்மணி வசந்த் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இவர் சமீபத்தில் வெளியான மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் ரவுடி ஜனார்த்தனன் படத்தில் ஒரு லிப்லாக் முத்தக்காட்சி உள்ளதால் நடிகை ருக்மணி வசந்த் நடிக்க மறுத்துள்ளார்.அதற்கு பின்புதான் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடிக்க படக்குழு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அந்த லிப்லாக் முத்தக்காட்சிக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் கீர்த்தி சுரேஷ் ஓகே சொல்லிவிட்டார். அதனால் ரவுடி ஜனார்த்தனன் படத்தில் கதாநாயகியாக நடித்த அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

திருமணமாகாத வளர்ந்து வரும் நடிகை ருக்மணி வசந்த் உதட்டு முத்தக் காட்சியை தவிர்க்க அந்த படத்தில் நடிக்கவே மறுத்துள்ளார். ஆனால் திருமணமான நடிகை கீர்த்தி சுரஷே் அந்த காட்சிக்கு டபுள் ஓகே சொல்லியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உளளது. ஒருவேளை ஏஐ தொழில்நுட்பத்தில் அந்த லிப்லாக் காட்சியை எடுப்பார்களோ என்று ரசிகர்கள் பலரும் சந்தேகமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்