நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி தமிழக முதல்வராக ஆட்சியை பிடித்துள்ளார். இந்த நிலையில் திமுக கட்சி ஆரம்பம் முதல் நடிகர் விஜயை நடிகர் நடிகர் என்ற விமர்சித்து வருகின்றனர். அவரது கட்சி நிர்வாகிகள் பலரும் கூத்தாடி கூத்தாடி என்றும் விமர்சிக்கின்றனர்.
எனினும் நடிகர் விஜய் இன்று தமிழக முதல்வராக பதவியில் அமர்ந்துள்ளார். அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக பல ஆண்டுகளாக அவருடன் இணைந்து பயணித்த பலர் இப்போது எம்எல்ஏக்களாக அமைச்சர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகர் தியாகு. குறிப்பாக நடிகர் விஜயகாந்தின் மிக நெருக்கமான நண்பர் தியாகு. அதனால் விஜயகாந்தின் பெரும்பாலான படங்களில் நடிகர் தியாகுவும் ஏதேனும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார்.
தவிர கிழக்கு வாசல் பொங்கலோ பொங்கல் என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் சந்திரமுகி என பல படங்களில் நடிகர் தியாகு நடித்துள்ளார். சமீபகாலமாக வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நடிகர் தியாகு படங்களில் நடிப்பது இல்லை.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் தியாகு கூறியதாவது, அது என்ன விஜயை எப்ப பார்த்தாலும் நடிகன் நடிகன்னு சொல்றீங்க? இந்த நடிகன் தான் திமுகவை வாழ வச்சான். முதல்ல கே ஆர் ராமசாமியை தான் அண்ணா பிரச்சாரத்தில் ஈடுபடச் செய்தார். அப்புறம் எம்ஜிஆரை வெச்சு கட்சியை வளர்த்தாங்க.
அப்புறம் எஸ்எஸ் ராஜேந்திரன் அப்புறம் நானும் ராதாரவி எஸ் எஸ் சந்திரன் நாங்க எல்லாம் ஒரு பேட்ச் ஆக திமுகவுக்காக பேசினோம். பிரசாரம் செய்தோம். அப்புறம் சரத்குமார் குஷ்பூ நெப்போலியன் இருந்து நடிகர் வடிவேலு வரை எத்தனையோ நடிகர்களை வைத்து தான் உங்க கட்சியை வளர்த்தீங்க என்று நடிகர் தியாகு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





