- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருமணத்துக்கு பின் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு, கணவர் குடும்பத்தின் அட்வைஸாக இருக்குமா?...

திருமணத்துக்கு பின் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு, கணவர் குடும்பத்தின் அட்வைஸாக இருக்குமா? – பேபி ஜான் தந்த தோல்விதான் காரணமா?

- Advertisement -

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார். குறிப்பாக விஜயுடன் பைரவா சர்க்கார் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் ரெமோ படங்கள் கீர்த்தி சுரேஷூக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி தேவியின் வாழ்க்கை வரலாறு படம் நடிகையர் திலகம் ( தெலுங்கில் மகாநடி) என்ற பெயரில் வெளியானது. இதில் சாவித்திரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் வாழ்ந்து காட்டியிருந்தார். அவரது அற்புதமான நடிப்பை பார்த்து ரசிகர்கள் பாராட்டினர். அவருக்கு சிறந்த நடிகை தேசிய விருதும் கிடைத்தது.

- Advertisement -

தொடர்ந்து தமிழில் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தார். சாமி 2 தொடரி பாம்பு சட்டை தானா சேர்ந்த கூட்டம் சண்டக்கோழி 2 பென்குயின் சாணிக்காயிதம் மாமன்னன் ரகுதாத்த சைரன் 108 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அடுத்து அவரது நடிப்பில் ரிவால்வர் ரீட்டா கன்னிவெடி ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி, நடிகை கீர்த்தி சுரேஷூக்கும் அவரது காதலர் ஆண்டனி தட்டில் என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கோவாவில் திருமணம் நடந்தது. 15 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்த தனது பள்ளி கால நண்பரை, கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமண விழாவில் நடிகர் விஜய் நடிகை திரிஷா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

- Advertisement -

இந்த சூழலில் தற்போது ஒரு புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகை கீர்த்தி சுரேஷ் இனி நடிப்பில் இருந்து விலகிவிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு பிறகு குடும்பம், பிள்ளைகள், கணவர் என வாழ ஆசைப்படும் நடிகைகள் பலரும், திருமணத்துக்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி விடுகின்றனர்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமா வாழ்க்கையில் இருந்து முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கணவர் அல்லது கணவர் குடும்பத்தின் அறிவுரையாக இருக்கலாம். அல்லது கடந்த 25ம் தேதி வெளியான பேபி ஜான் படம் பலத்த நஷ்டமடைந்த நிலையில் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுபற்றிய அறிவிப்பு சில தினங்களில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்