- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமா உலகில் கால் பதித்து 10 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் -...

சினிமா உலகில் கால் பதித்து 10 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் – இப்படி ஒரு தரமான சம்பவத்தை செஞ்சிருக்காரே? இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போதுமே மலையாள நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மலையாளத்தில் இருந்து வரும் நடிகைகள் இயற்கையிலேயே நல்ல அழகான பெண்களாக இருப்பது மட்டுமின்றி நடிப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

அதனால் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் பல நடிகைகளுக்கு இங்கே தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய வரவேற்பு அளித்து அவர்கள் பல படங்களில் நடிக்க வாய்ப்பு அளிக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனங்களை கவர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மயக்கம் என்ன என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் ரெமோ ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு அதிக கவனம் பெற்றது. தொடர்ந்து நடிகையர் திலகம் என்ற மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் சாவித்திரி கேரக்டரில் நடித்து மிகப்பெரிய அளவில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றார். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை தேசிய விருது கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். அதேபோல் விஜயுடன் பைரவா, சர்க்கார் ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருந்தார். நடிகர் விக்ரமுடன் சாமி 2 படத்திலும், விஷாலுடன் சண்டக்கோழி 2 படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். சமீபத்தில் அவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

சினிமாத்துறையில் நுழைந்து பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் இதுவரை எந்த நடிகருமே, நடிகையுமே யோசிக்காத ஒரு புதுமையான விஷயத்தை செய்துள்ளார். அதாவது அவர் முதலில் நடித்த படத்தின் தயாரிப்பாளர் முதல் சமீபத்தில் நடித்த படத்தின் தயாரிப்பாளர் வரை அவர் இதுவரை நடித்துள்ள அத்தனை பட தயாரிப்பாளர்களுக்கும் தனது பத்தாண்டு கால சினிமா பயண வெற்றிக்கு நன்றி தெரிவித்து அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி, அவர்களுக்கு விலை உயர்ந்த ஒரு பரிசு பொருளையும் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த பண்புமிக்க செயல் சினிமா வட்டாரத்தில் பெரிய அளவில் கவனத்திற்குரிய பாராட்டப்படும் விஷயமாக பேசப்பட்டு வருகிறது. தன்னை சினிமா உலகில் தொடர்ந்து நீடித்திருக்க, தயாரிப்பாளர்கள் தந்த வாய்ப்புதான் காரணம் என்பதை உணர்ந்து அன்று முதல் இன்று வரை அவர் நடித்த படங்களின் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதமும் பரிசு பொருளும் அனுப்பி தனது நன்றியை செலுத்தியுள்ளார். அவரது இந்த உயர்ந்த பண்பை சக நடிகர்கள் நடிகைகள், ரசிகர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்