நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். இப்போதைக்கு ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் விஜய் மட்டும்தான். வருகிற தனது 69வது படத்தில் அவரது சம்பளம் ரூ. 250 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்த படமே விஜயின் கடைசி படம் என்றும், அதன்பிறகு தமிழக அரசியல் களத்தில் அவர் தீவிர பணியாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
நடிகர் விஜய் கட்சி துவங்கியது முதல், அவரது அரசியல் வருகைக்கு எதிர்மறையான விமர்சனங்களே அதிகமாக வரவில்லை. அதிமுக திமுக கட்சிகள் சார்ந்தவர்கள் மட்டுமே, எதிர் கருத்துகளை கூறி வரும் நிலையில், மக்கள் தரப்பில் விஜய்க்கு அமோகமான ஆதரவு காணப்படுகிறது. குறிப்பாக இளம் வயதினர் விஜய் அரசியல் வருகையை மிகவும் விரும்பி வரவேற்கவே செய்கின்றனர்.
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் திரையுலகம் சார்ந்த அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் இணைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில் சினிமாவில் ஜெயித்து ஒரு கட்டத்துக்கு பிறகு பலரும் வரத் துடிப்பது அரசியலுக்கு தான். அதனால் வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் கட்சியில் பல சினிமா பிரபலங்களை காண வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் பங்கேற்ற ஒரு நேர்காணலில் பேசும் போது, புகழின் உச்சியில் இருக்கும்போதே, விஜய் இனிமேல் சினிமாவில் நடிக்க வேண்டாம், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வருவது ரொம்பவும் பெரிய விஷயம். இப்படி எத்தனை பேர் செய்வார்கள், அரசியலிலும் அவர் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
விஜய், கட்சியை அறிவித்த போது படப்பிடிப்பில் இருந்த அவரை நான் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்ட போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது எனக் கேட்டேன். கடைசி படம் குறித்து சொன்ன போது வருத்தமாகவும், கட்சி துவங்குவதை சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் விஜய் கூறினார். கட்சி பெயர் நன்றாக உள்ளது. தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு சீட் கொடுங்க என்று கேட்டு வந்தேன், என்று கீர்த்தி சுரேஷ் அதில் கூறியிருக்கிறார்.
இதன்மூலம், விஜய் கட்சியில் கீர்த்தி சுரேஷ் நிச்சயமாக இணைந்து விடுவார் என்பது உறுதியாகி விட்டது. ஏனெனில் சர்கார், பைரவா படங்களில் விஜயுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த போது, அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி உள்ளது. அதே நேரத்தில் விஜய் கட்சியில், மகளிரணி தலைவர் போன்ற பதவி அவருக்கு வழங்கப்படலாம். ஆனால், விஜயின் மிக நெருக்கமான தோழி திரிஷா என்று கூறப்படுவதால், அவரும் போட்டிக்கு வர வாய்ப்புள்ளது. அதனால் விஜய் கட்சியில் கீர்த்தி சுரேஷ், திரிஷா இடையே பதவி போட்டி கடுமையாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





