- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க காதுகளுக்கு அது கேட்கலையா? என்ன அசௌகரியம் உங்களுக்கு தெரிந்தது? - இயக்குனர் மிஷ்கின் சர்ச்சை...

உங்க காதுகளுக்கு அது கேட்கலையா? என்ன அசௌகரியம் உங்களுக்கு தெரிந்தது? – இயக்குனர் மிஷ்கின் சர்ச்சை குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் ஆவேசம்!

- Advertisement -

சென்னையில் சத்தியவான் சாவித்திரி படத்தின் பிரமோசன் பிரஸ்மீட் நடந்தது. அப்போது மேடையில் அருகருகே இயக்குனர் மிஷ்கின் நடிகை கீர்த்தி சுரேஷ் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்போது மிஷ்கின் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பாராட்டி பேசியபோது மிஷிகினின் கை ஏதேச்சையாக கீர்த்தியின் தொடை மேல் பட்டது. இந்த வீடியோ வைரலான நிலையில் கீர்த்தி சுரேஷ் அப்போது அசௌகரியமாக உணர்ந்தார் என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமாக பதில் தந்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், முதலில் என் முகத்தில் உங்களுக்கு எங்கே அசௌகரியம் தெரிந்தது? நாங்கள் இருவரும் தந்தை மகள் போன்ற உறவைப் பகிர்ந்து கொள்கிறோம் என்று சொன்னது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? சில விஷயங்களை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது என்று அதில் கோபமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்