- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் நடித்த திருப்பதி படத்துக்கு முதலில் வைத்த பெயர், உண்மையை போட்டுடைத்த இயக்குனர் பேரரசு -...

அஜீத்குமார் நடித்த திருப்பதி படத்துக்கு முதலில் வைத்த பெயர், உண்மையை போட்டுடைத்த இயக்குனர் பேரரசு – அந்த பேரு வெச்சிருந்தா பெரிய சிக்கல்தான்!

- Advertisement -

இயக்குனர் பேரரசு தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். கமர்ஷியல் படங்களாக இருந்தாலும் ரசிகர்கள் ரசிக்கும் விதமான கதைகளை திரைப்படமாக்கியவர். குறிப்பாக குடும்பத்துடன் பார்க்கும் அளவுக்கு படத்தில் சென்டிமென்ட், காதல், காமெடி குடும்ப கதைகளாகவும் பேரரசு படங்கள் இருக்கின்றன.

குறிப்பாக பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி சிவகாசி அஜீத்குமார் நடித்த திருப்பதி அர்ஜூன் நடித்த திருவண்ணாமலை விஜயகாந்த் நடித்த தர்மபுரி பரத் நடித்த பழனி திருத்தணி என தமிழகத்தில் உள்ள பிரபல ஊர் பெயர்களை தன் படங்களின் டைட்டிலாக வைப்பது பேரரசுவின் வழக்கமாக உள்ளது.

- Advertisement -

சமீபகாலமாக பேரரசு இயக்கிய படங்கள் எதுவும் வெளியானதாக தெரியவில்லை. ஆனால் விஜய், அஜீத்குமார் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்கிய பிரபல இயக்குனராக இன்றும் இருந்து வருகிறார். புதிய படங்களின் பிரமோசன் நிகழ்ச்சிகளிலும் சினிமாத்துறை சங்க நிர்வாகிகளில் ஒருவராக தொடர்ந்து பங்கேற்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு கூறியதாவது, அஜித்குமார் நடித்த திருப்பதி படத்திற்கு முதலில் நான் வைத்திருந்த தலைப்பு வெள்ளையன். ஆனால் அதற்கு முன்பு என் இயக்கத்தில் வெளிவந்த திருப்பாச்சி சிவகாசி பழனி என என்னுடைய படங்களுக்கு ஊர் பெயர்களை வைத்து டைட்டில் வைத்திருந்தேன்.

- Advertisement -

அப்படி ஊர் பெயர்களில் வெளியான படங்கள் பெரிய வெற்றி பெற்றதால், படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், ஊர் பெயரில் தலைப்பு வைத்தால்தான் உங்கள் ஸ்டைல் படமாக இருக்கும் என்று என்னிடம் கூறினார் அதன் பிறகு தான் திருப்பதி என அந்த படத்துக்கு தலைப்பு வைத்தேன் திருப்பதி படமும் ஹிட்டானதால் பேரரசு ஊரரரசு ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

ஆனால், அஜீத்குமார் நடித்த படத்துக்கு வெள்ளையன் என்ற தலைப்பு வைத்திருந்தால், இது உருவத்தின் நிறத்தை உயர்த்தி சொல்லும் ஒரு தலைப்பாக மாறி, பல விமர்சனங்களை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கும். இதனால் தேவையில்லாத சிக்கலில் டைரக்டர் பேரரசு சிக்கி இருப்பார். அந்த திருப்பதி சாமிதான், தயாரிப்பாளர் உருவத்தில் அந்த தலைப்பை மாற்ற வைத்து காப்பாற்றிவிட்டது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்