நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக 45 ஆண்டுகளாக தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார். ரஜினிகாந்துக்கு இப்போது 73 வயதாகியும் இன்னும் அவர்தான் தமிழ் சினிமா ரசிகர்களின் ஹீரோவாக இருக்கிறார். ரஜினிக்கான மாஸ் இன்னும் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை என்பதையே ஜெயிலர்படத்தின் மிகப்பெரிய வெற்றி எடுத்துக் காட்டுகிறது.
கடந்தாண்டில் வெளியான ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய் வரை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நெல்சன் திலீப் குமார் இயக்கிய அந்த படம் பல ஆண்டுகளுக்கு முன் வந்த சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம் என்ற படத்தின் ரீமேக் தான் என்பது ரசிகர்களே அறிந்த ஒன்றுதான். ஏனென்றால் தங்கப்பதக்கம் சிவாஜி கேரக்டரும், ஜெயிலர் படத்தில் ரஜினி கேரக்டரும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் சமூக விரோதத்தில் ஈடுபடும் மகனை சிவாஜி சுட்டுக் கொள்வார். அதே கதையை கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்து புது பெயிண்ட் அடித்து, நகாசு வேலைகளை செய்து ஜெயிலர் படமாக வெளியிட்டு பல கோடி வசூலை அள்ளியது. டைரக்டர் நெல்சன் இப்போது அடுத்த கட்டமாக ஜெயிலர் 2 படத்தை இயக்க நெல்சன் தயாராகி வருகிறார்.
இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இது ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படமாகும். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டீசரில் தனது வா வா பக்கம் வா பாடலின் பிஜிஎம் ஐ பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏனெனில் ரஜினிகாந்த், இளையராஜா இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில், இப்படி ரஜினிகாந்த் படத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் என்று பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு புதிய தகவலை வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஒருமுறை இளையராஜாவும் ரஜினியும் இணைந்து திருவண்ணாமலைக்கு காரில் சென்றிருக்கிறார்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.
அங்கு இருவரும் சென்று காரில் இருந்து இறங்கியவுடன், அங்கிருந்த ரசிகர் கூட்டம் தலைவா தலைவா என்று கத்திக்கொண்டு. ரஜினியை பார்த்து ஆரவாரம் செய்திருக்கிறார்கள். ரஜினியை வரவேற்று சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதை நேரில் பார்த்து இளையராஜா தன்னை கவனிக்காமல் ரஜினியை ரசிகர் கூட்டம் கொண்டாடியதால், கோபமடைந்த இளையராஜா, ரஜினியிடம் நீ கார்ல ஏறி கிளம்பு என ரஜினியை அங்கிருந்தே அனுப்பிவிட்டார். இளையராஜா பேச்சை மீறாமல், ரஜினியும் அங்கிருந்து கிளம்பி விட்டார் என்று அந்தணன் கூறியுள்ளார்.





