- Advertisement -
Homeபொழுதுபோக்குகில்லி படத்தில் திரிஷா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நான்தான், அந்த நடிகை சொன்னதை கேட்டு…...

கில்லி படத்தில் திரிஷா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நான்தான், அந்த நடிகை சொன்னதை கேட்டு… நல்லவேளை நீங்க நடிக்கலே என கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் கில்லி. இயக்குனர் தரணி இயக்கிய இந்த படத்தில் விஜய் திரிஷா பிரகாஷ்ராஜ் ஆஷிஷ் வித்யார்த்தி வித்யா கணேஷ் தாமு மயில்சாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 2004ம் ஆண்டில் மிகப்பெரிய மாஸ் ஹிட் படமாக விஜய்க்கு கில்லி படம் அமைந்தது.

இந்த படத்தில் முத்துப்பாண்டி என்ற கேரக்டரில் வில்லனாக நடித்திருந்த பிரகாஷ் ராஜ், தனலட்சுமியாக நடித்திருந்த திரிஷாவை பார்த்து செல்லம் ஐ லவ் யூ என்ற டயலாக் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது. விஜய் நடித்த ஆக்சன் படங்களில் கில்லி மிக முக்கியமான ஒரு படமாக இன்றுவரை இருந்து வருகிறது.

- Advertisement -

கடந்த 2024ம் ஆண்டில் கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. தொடர்ந்து மலையாள படங்கள் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தமிழில் வெளியான எந்த படமும் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெறவில்லை. அந்த நேரத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் ரி ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி படம் தியேட்டர்களில் திருவிழா கண்டது. 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது.

கடந்த 2002ம் ஆண்டில் விக்ரம் நடிப்பில் வௌியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிரண் ரத்தோர். இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அன்பே சிவம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வின்னர் படத்திலும் நடித்திருந்தார்.

- Advertisement -

காதல் காமெடி கதைகளை மையமாக கொண்டு படம் இயக்கும் சுந்தர் சி, பெரும்பாலும் தனது படங்களில் ஹீரோயின்களை கவர்ச்சியாக தான் காட்டுவார். குறிப்பாக பாடல் காட்சிகளில் கிளாமர் தூக்கலாக இருப்பது வழக்கம். அந்த வகையில் வின்னர் படத்தில் கிரண் ரத்தோர் காட்டிய கவர்ச்சி, அவர் மீதான இமேஜை குறைத்தது. பிறகு அதுபோன்ற கவர்ச்சி வேடங்களில்தான் பல படங்களில் வாய்ப்பு வந்தது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கிரண் ரத்தோர், கில்லி படத்தில் நடிகை திரிஷா நடித்த தனலட்சுமி கேரக்டரில் நான்தான் நடித்திருக்க வேண்டும். எனக்குதான் முதலில் அந்த வாய்ப்பு வந்தது. சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். நல்லவேளை, நீங்க நடிக்கலே, கிளாமரா நீங்க நடிச்சிருந்தா படம் அவ்ளோதான் என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்