- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை கேஆர் விஜயா கூறியதாவது, எனக்கு ஒரு மிகப்பெரிய சொத்து என் கணவர் தான். என்னை எல்லா வெளிநாடுகளுக்கும் கூட்டிட்டு போய் இருக்கிறார். எனக்குன்னு தனி விமானம் வாங்குனதும் என் கணவர் தான். அந்த விமானத்தில் பலமுறை சூட்டிங்கில் டிராப் பண்ணி இருக்கிறார். நான் திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று தான் இருந்தேன். ஆனால் என் கணவர் தான் 3 மாசம் ஆயிடுச்சு. இதுக்கு மேல வீட்ல இருந்தால் சோம்பேறி ஆயிடுவேன்னு சொல்லி சொல்லி என்னை திரும்ப நடிக்க அனுப்பி விட்டார் என்று நடிகை கேஆர் விஜயா கூறியிருக்கிறார்.





