- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் மட்டும் சிஎம் ஆகி விட்டால் முதல் கையெழுத்தே அதற்கு தான் போடுவேன் - வா...

நான் மட்டும் சிஎம் ஆகி விட்டால் முதல் கையெழுத்தே அதற்கு தான் போடுவேன் – வா வாத்தியார் பட நாயகி போட்டாரே ஒரு போடு!

- Advertisement -

சினிமாவில் பெயரும் புகழும் சம்பாதித்து விட்டால் ஒரு கட்டத்தில் அவர்கள் அரசியலுக்கு வந்து விடுகின்றனர். இதில் விஜயகாந்த் விஜய் போன்ற பெரிய நடிகர்கள் அரசியல் கட்சி துவங்கி தலைவராக தேர்தல் களத்தில் நுழைகின்றனர். மற்ற சில நடிகர்கள் ஏதேனும் ஒரு கட்சியில் சேர்ந்து எம்எல்ஏ எம்பி என ஆகி விடுகின்றனர்.

ஆனால் சமீபத்தில் அரசியல் களத்தில் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் கட்சி துவங்கி வீரவசனம் பேசி மக்களின் மனங்களை ஜெயிக்க நினைத்தவர் கமல்ஹாசன். ஆனால் திரைப்பட கலைஞராக அவரை கொண்டாடிய தமிழக மக்கள் அரசியல்வாதியாக கண்டுகொள்ளவே இல்லை.

- Advertisement -

அதனால் கட்சியை கலைத்து விட்டு சினிமாவில் முழு கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தனது அரசியல் எதிரியாக முதலில் விமர்சித்த திமுக கட்சியுடன் சேர்ந்து பலத்த அதிர்ச்சியை தந்தார். இப்போது திமுக விசுவாசியாக மாறி ராஜ்ய சபா எம்பி ஆகவும் வலம் வருகிறார்.

இதுபோல் யார் வேண்டுமானாலும் அரசியல் களத்தில் நுழைந்து ஏதேனும் பதவிகளுக்கு வந்துவிடும் சூழலே நிலவுகிறது. அந்த வகையில் ஒரு வளர்ந்து வரும் நடிகை கிருத்தி ஷெட்டி முதல்வரானால் முதலில் நான் என்ன செய்வேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் கிருத்தி ஷெட்டி. இவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த வாத்தியார் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

- Advertisement -

இப்போது பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எல்ஐகே படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் டைரக்ட் செய்துள்ள இந்த படம் வருகிற 10ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையே பிரமோசன் ஒன்றில் பங்கேற்ற நடிகை கிருத்தி ஷெட்டியிடம் நீங்கள் முதல்வர் ஆனால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நடிகை கிருத்தி ஷெட்டி கூறுகையில், நம் நாட்டில் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு போதுமான தண்டனைகள் இல்லை என்று நினைக்கிறேன். அதனால் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை கொண்டு வர ஆசைப்படுகிறேன். நான் முதல்வரானால் அப்படியான விஷயங்களுக்கு தான் என்னுடைய முதல் கையெழுத்தை போடுவேன் என்று கிருத்தி ஷெட்டி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்