- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகைகளை கடத்த வந்த ரவுடி கும்பல், ஸ்டண்ட் ஆட்களோடு களத்தில் இறங்கி அடித்து துவம்சம் செய்த...

நடிகைகளை கடத்த வந்த ரவுடி கும்பல், ஸ்டண்ட் ஆட்களோடு களத்தில் இறங்கி அடித்து துவம்சம் செய்த நிஜ ஹீரோ – நடிகை லட்சுமி சொன்ன தகவல்!

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கடந்த 1987ம் ஆண்டில் மறைந்தார். அவர் மறைந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால் இன்னமும் அந்த பொன்மனச் செம்மலின் புகழை பாடாதவர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதும் தமிழக அரசியல் களத்தில் சொல்லப்படும் ஒரு பெயர் எம்ஜிஆர் என்கிற அந்த 3 எழுத்து மந்திரமாக தான் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு நடிகராக மட்டுமின்றி தமிழக முதல்வராகவும் அரசியல் களத்தில் மக்களின் நன்மதிப்பை பெற்றவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். 3 முறை சட்டசபை தேர்தலில் தொடர்ந்து வெற்றி கண்டு முதல்வராக பதவியேற்றவர். அமெரிக்காவில் உடல் நலமின்றி அவர் சிகிச்சையில் இருந்த போது தமிழக சட்டசபை தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்று முதல்வரானார்.

- Advertisement -

அதனால்தான் தமிழக அரசியல் வரலாற்றில் படுத்துக்கொண்டே ஜெயித்த ஒரே தலைவர் எம்ஜிஆர் என்று இன்றும் புகழப்படுகிறது. அப்படிப்பட்ட எம்ஜிஆர் மனிதநேய மிக்கவர். பண்பாளர். கொடைவள்ளல். உதவி என்று கேட்பவர்களுக்கு மனம் கோணாமல் வாரி வழங்கும் பொன்மனச் செம்மல் என்று அவரை இன்றும் மக்கள் பாராட்டி மகிழ்கின்றனர். ஆனால் அவர் துணிச்சல் மிக்க ஒரு வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த படம் மாட்டுக்கார வேலன். இதில் ஒரு எம்ஜிஆருக்கு ஜெயலலிதாவும் ஒரு எம்ஜிஆருக்கு லட்சுமியும் நாயகிகளாக ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த லட்சுமி பின்னாளில் சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை லட்சுமி கூறியதாவது, சின்னவர் எம்ஜிஆர் பற்றி என்ன சொல்வது? அவரை சின்னவர் என்று நாங்க எல்லாம் கூப்பிட்டது இல்லை. அவரை பர்ஸ்ட் டைம் மீட் பண்றேன். மாட்டுக்கார வேலன் படத்துக்காக பேசறாங்க. அவுட்டோர் போறோம். அப்போ ஒரு கும்பல் வேன்ல வருது. பெண்கள் இருக்கறாங்க. கடத்தலாம்ங்கற மாதிரி பிளான்ல அங்கு வர்றாங்க.

பிரச்னை வரும்ன்ன உடனே பேக்கப் பண்ணி எங்களை அனுப்பிச்சிட்டார். வண்டியில் உட்காரும்போது நாங்க திரும்பி பார்க்கிறோம். புலியூர் சரோஜா இதுக்கு சாட்சி. அவங்களும் அங்க இருக்காங்க. அன்னிக்கு நான் பார்க்கறேன். நம்ம பைட்டர்ஸ் எல்லாம் சைடு இருந்து வந்தாங்க. எல்லாருக்கும் அடி. கூடவே இவரும் இறங்கி உண்மையான பைட் பண்ற ஹீரோவை அன்னிக்கு நான் பார்த்தேன். அது எம்ஜிஆர் அத்தனை பேரையும் அடிச்சு தூக்கிப் போட்டுட்டு அப்புறமா எங்களை கூப்பிட்டு ஷூட்டிங் பண்ணினாங்க என்று நடிகை லட்சுமி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்