- Advertisement -
Homeபொழுதுபோக்குவிமான நிலையத்தில் அவசர நேரத்தில் நேர்ந்த பயமான அனுபவம் - வெளிப்படையாக நடந்ததை சொன்ன வடிவேலு...

விமான நிலையத்தில் அவசர நேரத்தில் நேர்ந்த பயமான அனுபவம் – வெளிப்படையாக நடந்ததை சொன்ன வடிவேலு பட நடிகை லதா ராவ்!

- Advertisement -

டிவி சீரியல் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை லதா ராவ். இவர் மெட்டிஒலி உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார். நடிகர் ஜெயம் ரவி தமன்னா நடித்த தில்லாலங்கடி என்ற படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாகவும் லதா ராவ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை லதா ராவ் ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அவருக்கு திடீரென மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பெண்களின் அவசர தேவைக்காக நாப்கின் கிடைக்குமா என்று விசாரித்துள்ளார். ஆனால் பெண்கள் கழிப்பறையில் நாப்கின் வழங்கும் வசதி தற்போது செயல்பாட்டில் இல்லை என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

அதனால் பதட்டமடைந்த லதா ராவ், 7வது கேட் அருகே உள்ள மருந்தகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அப்போது அங்கு பணியாளர் யாரும் இல்லாததால் மேலும் அவர் டென்சன் ஆகியிருக்கிறார். விமானம் புறப்படும் நேரம் நெருங்கியதால் லதா ராவ் மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார். பின்னர் அங்கு பணியாளர் வந்ததும் நாப்கின் வாங்கிக் கொண்டு ஓடி வந்து விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.

இந்த அனுபவத்தை வீடியோ ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ள நடிகை லதா ராவ் கூறியதாவது, பெண்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக நாப்கின் இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். பர்ஸ்சில் பணம் செல்போன் இருப்பது போல தங்களது பையில் நாப்கின் உள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

எப்போதுமே நான் கவனமாக பையில் நாப்கின் வைத்திருப்பேன். தேவைப்பட்ட நேரத்தில் மற்ற பெண்களுக்கு கூட கொடுத்து உதவியிருக்கிறேன். ஆனால் இந்த முறை எப்படியோ மிஸ் ஆகிவிட்டது. ஆனால் இது எனக்கு மாதவிடாய் காலமும் இல்லை. ஆனால் எப்படியோ இது நேர்ந்து விட்டது.

இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை வீடியோ வெளியிட்டு சொல்ல வேண்டுமா என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் பெண்களை பொறுத்தவரை இது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அதனால் எனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவ பாடத்தை மற்றவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன் என்று நடிகை லதா ராவ், பயண நேரத்தில் பெண்களிடம் நாப்கின் கையிருப்பில் இருக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் அறிவுறுத்தி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்