- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் ரெடி பாடல் விஜய்யின் அரசியல் வருகையை குறிக்கிறதா? பாடல் ஆசிரியர் கொடுத்த புது விளக்கம்

நான் ரெடி பாடல் விஜய்யின் அரசியல் வருகையை குறிக்கிறதா? பாடல் ஆசிரியர் கொடுத்த புது விளக்கம்

- Advertisement -

நேற்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு “லியோ” திரைப்படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடலான “நான் ரெடி” பாடல் வெளியானது. அனிருத் இசையில் இப்பாடலை விஜய், தனது சொந்த குரலில் பாடியிருந்தார். அப்பாடல் தற்போது ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

“நான் ரெடிதான் வரவா?” பாடலில் இடம்பெற்ற வரிகள் அனைத்தும் விஜய்யின் அரசியல் வருகையை குறிப்பிடும் வகையில் எழுதப்பட்டுள்ளதாக பலரும் டீகோட் செய்து வருகின்றனர். “நான் ரெடிதான் வரவா? அண்ணன் நான் தனியா வரவா?” ஆகிய வரிகளில் விஜய் கூட்டணி இல்லாமல் தனியாக அரசியலுக்குள் வருகிறார் என்பதை வெளிப்படுத்துகிறார் என்று இப்பாடல் குறித்த டீகோடிங் மிக பயங்கரமாகவே இருந்தது. இந்த பாடல் வெளிவந்த பிறகு இணையத்தில் பலரும் இந்த பாடலை அவரவர்களுக்கு ஏற்றவாறு டீகோடிங் செய்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த பாடலை எழுதியவர் விஷ்ணு எடாவன் என்பவர். இவர் லோகேஷ் கனகராஜ்ஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.  “விக்ரம்” திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த “போர் கண்ட சிங்கம்”, “நாயகன் மீண்டும்” ஆகிய டெரிஃபிக்கான பாடல்களை எழுதியவரும் இவரே.

இந்த நிலையில் பாடலாசிரியர் விஷ்ணு எடாவன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர், “நான் ரெடிதா பாடலில் விஜய்யின் அரசியலை குறிப்பிடும் வகையிலும் மக்களுக்கு சென்று சேரும் வகையில் வரிகள் இடம்பெற்றிருக்கிறதா?” என கேட்டார்,

- Advertisement -

அதற்கு பதிலளித்த விஷ்ணு எடாவன், “அரசியல் சம்பந்தபட்ட வரிகள் இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. நான் ரெடிங்குற வரி இந்த பாட்டுக்கு நன்றாக இருந்தது. மற்றபடி அரசியல் சம்பந்தமான வரிகள் இதில் இடம்பெறவில்லை” என கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்