- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் நல்ல மனிதர்களை போல முகமூடி நடிகர்கள், கடந்த 5 ஆண்டுகளில்… - உண்மையை பேசிய...

சினிமாவில் நல்ல மனிதர்களை போல முகமூடி நடிகர்கள், கடந்த 5 ஆண்டுகளில்… – உண்மையை பேசிய நடிகை மாளவிகா மோகனன்

- Advertisement -

தமிழ் தெலுங்கு இந்தி மற்றும் மலையாளம் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடிகர் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் படத்தில் வில்லி கேரக்டரில் மிரட்டியிருந்தார்.

தமிழில் மட்டுமின்றி பல மொழிகளிலும் நடிப்பில் அசத்தி வரும் மாளவிகா மோகனன், தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். குறிப்பாக தங்கலான் படம் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் அந்த படத்தில் மாளவிகா மோகன் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பேட்ட படத்திலும் மாளவிகா மோகனன் நடிப்பு சிறப்பாக இருந்தது.

- Advertisement -

சினிமா துறையில் தொடர்ந்து பலவிதமான புகார்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக மலையாள சினிமாவில் நடிகர்கள் இயக்குனர்கள் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் புதுமுக நடிகைகளிடமும், வளர்ந்து வரும் நடிகைகள் வாய்ப்பு கேட்டு வரும்போதும் அவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக புகார் எழுந்து கடந்தாண்டில் மலையாள சினிமாவில் பரபரப்பானது.

அப்போது தமிழ் சினிமாவை சேர்ந்த நளினி ராதிகா சரத்குமார் குஷ்பு ஊர்வசி சுகாசினி ரேவதி உள்ளிட்ட சில நடிகைகள் கூறும்போது, தமிழ் சினிமாவிலும் இதுபோன்ற அத்துமீறல்கள் இருந்து வருவதாகவும் சிலர் அதை வெளிப்படுத்துவது இல்லை என்றும் பகிரங்கமாக குற்றச்சாட்டு கூறியிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, சினிமாவில் சில நடிகர்கள் பெண்களை மதிப்பவர்கள் போல தங்களை காட்டிக் கொள்வார்கள். அந்த முகமூடியை சரியான நேரத்தில் அணிந்து நல்ல பெயர் வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் கேமராவுக்கு பின்னால் அவர்கள் எப்படி எல்லாம் மாறுவார்கள் என்பதை கண்கூடாக நான் பார்த்திருக்கிறேன்.

அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் முகமூடி அணிந்திருக்கும் பல நடிகர்கள் சினிமாவில் இருக்கிறார்கள். ஆண் என்றால் ஒரு மாதிரி பெண் என்றால் ஒரு மாதிரி பார்க்கும் கண்ணோட்டம் எப்போது மாறும் என்று தெரியவில்லை என்று நடிகை மாளவிகா மோகனன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்