- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படத்தை காண ரசிகர்கள் காட்டும் ஆர்வம், அதற்கு கமல், ஷங்கர் மட்டுமே காரணமல்ல...

இந்தியன் 2 படத்தை காண ரசிகர்கள் காட்டும் ஆர்வம், அதற்கு கமல், ஷங்கர் மட்டுமே காரணமல்ல – அவரை மீண்டும் திரையில் பார்க்கும் ஆசையில் ரசிகர்கள்!

- Advertisement -

நாளை உலகம் முழுவதும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படம், 5000 திரைகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, ரகுல் பிரீத்தி சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தியன் 2 படத்தை பொருத்தவரை 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகமாக வெளிவரும் ஒரு முக்கிய தமிழ் படமாக கவனிக்கப்படுகிறது. ஏனெனில் 1996 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கமல்ஹாசனுக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருதை பெற்றுத் தந்தது.

- Advertisement -

நாட்டில் புரையோடிப் போய்விட்ட ஊழல், லஞ்சம் குறித்து பேசிய இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தது. ஒரு சிறந்த படமாக மக்களால் அங்கீகரிக்கப்பட்டு பெரிய அளவில் வசூல் மழையும் பொழிந்தது. அதே நேரத்தில் கமலஹாசன் இரட்டை வேடத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார். அதில் கடைசி காட்சியில் தனது சொந்த மகனையே கமல்ஹாசன் கத்தியால் குத்திக் கொல்வது போன்ற அந்த காட்சியை ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சிக்கவும் செய்தனர்.

அதே நேரத்தில் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று மறுத்து தன் மகள் கஸ்தூரியின் மறைவுக்கும் கமல்தான் காரணமாக இருக்கிறார் என்றும் ஒரு கட்டத்தில் விமர்சிக்கப்பட்டது. எனினும் பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நாளை வெளியாகும் இந்தியன் 2 படத்தில் மிக முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. அதில் மிகவும் குறிப்பாக இந்த படத்தில் மறைந்த காமெடி நடிகர் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக் நடித்திருக்கிறார். அதாவது அவர் உயிருடன் இருக்கும்போது இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்திருக்கிறார். அவர் மறைவுக்கு பிறகு விவேக் நடித்த காட்சிகளை நீக்கி விட்டு வேறொரு நடிகரை நடிக் வைக்கலாம் என்று சிலர் ஆலோசனை கூறிய நிலையில் அதை முற்றிலுமாக மறுத்த டைரக்டர் ஷங்கர், விவேக் நடித்த காட்சிகளுடன் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீதிக் காட்சிகளிலும் விவேக் நடிக்கும்படி செய்திருக்கிறார்.

நடிகர் விவேக்கை அவரது மறைவுக்கு பிறகு திரையில் பார்க்க ரசிகர்கள் இந்தியன் 2 படத்தை காண அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல் மறைந்த மலையாள நடிகர் நெடுமுடி வேணுவும் மறைவுக்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் பிரபல காமெடி நடிகர் மனோபாலாவும் இந்த படத்தில் நடித்திருப்பதால் ஷங்கர், கமல் ஆகியோரை கடந்தும் மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா நெடுமுடி வேணு ஆகியோரின் நடிப்பை ரசிப்பதற்காக, அவர்களை திரையில் பார்ப்பதற்காக இந்தியன் 2 படத்தை காண ரசிகர்கள் அதிக ஆர்வமாக இருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்