- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதலில் இதை செய்ய முடிவு செஞ்சேன், அப்புறம் அதையும் மனப்பூர்வமா செஞ்சுட்டேன் - ரசிகர்களை ஆச்சரியப்பட...

முதலில் இதை செய்ய முடிவு செஞ்சேன், அப்புறம் அதையும் மனப்பூர்வமா செஞ்சுட்டேன் – ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை மீனா!

- Advertisement -

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக மாற்றுத்திறனாளி சிறுமியாக நடித்தவர் மீனா. இந்த படத்தின் கதைப்படி நடிகை அம்பிகாவுக்கு மகளாக அவர் நடித்திருப்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கேரக்டரிலேயே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வெளியான சில ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிக்கு ஜோடியாக எஜமான் படத்தில் நடிகை மீனா நடித்திருந்தார். ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிறுமி மீனாவுடன் நடித்த ரஜினிகாந்த், எஜமான் படத்தில் அவருக்கு கணவராகவே நடித்தது பெரிய அளவில் விமர்சனம் எழுந்தது.

எனினும் படத்தின் வெற்றியை அது பாதிக்கவில்லை. ரஜினி மீனா கெமிஸ்டரி நன்றாக ஒர்க் அவுட் ஆனதால் அடுத்து மீனாவும் ரஜினியும் முத்து வீரா ஆகிய படங்களிலும் இணைந்து நடித்திருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான அண்ணாத்த படத்திலும் மீனா நடித்திருந்தார். ஆனால் கதாநாயகியாக இருந்தது நயன்தாரா தான்.

நடிகை மீனாவுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் விஜய்க்கு மகளாக தெறி படத்தில் நடித்திருந்தார். மீனாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். கணவரின் மறைவால் நொறுங்கிப் போன மீனா, பல மாதங்களுக்கு பிறகுதான் மீண்டும் நடிக்கவே வந்தார். இப்போது திரிஷியம் 3 மலையாள படத்தில் மீனா நடித்துள்ளார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை மீனா கூறியதாவது, என்னைப் பார்க்கிற எல்லோருமே என்னுடைய கண்கள் அழகா இருக்கு, நல்லா இருக்கு என்று சொல்வார்கள். சரி நாம போனதுக்கு அப்புறம் நம்ம கண்ணு இருக்கட்டுமேன்னு நினைச்சு கண்தானம் செய்ய நாம் முடிவு பண்ணி பதிவு பண்ணிட்டேன்.

அதுக்கப்புறம் யாருக்காவது உதவுமே அப்படி என்று என்னுடைய எல்லா உடல் உறுப்புகளையும் தானம் பண்ண ரெஜிஸ்டர் பண்ணிட்டேன். என்னை பார்த்து வேற யாரும் இப்படி பண்ண முன்வருவாங்கன்னு ஒரு நல்ல எண்ணம் தான் இதற்கு காரணம் என்று நடிகை மீனா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். முதலில் கண்தானம், பிறகு உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் தானம் செய்த நடிகை மீனாவின் குணத்தை ரசிகர்கள் வியந்துபோய் பாராட்டி வருகின்றனர்.

சற்று முன்