- Advertisement -
Homeபொழுதுபோக்குமுருகதாஸ் படத்தில் இணைந்த முக்கியமான பிரபலம்... சிவகார்த்திகேயன் காவியத்திலிருந்து சிறப்பான தகவல்...

முருகதாஸ் படத்தில் இணைந்த முக்கியமான பிரபலம்… சிவகார்த்திகேயன் காவியத்திலிருந்து சிறப்பான தகவல்…

- Advertisement -

மாவீரன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜ்குமார் பெரிய சாமியுடன் இணைந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்தது. ராஜ்குமார் பெரியசாமி ஏற்கனவே கௌதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.

 

இதன் காரணமாக சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இணையும் திரைப்படத்தின் அறிவிப்பிற்கே ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்திற்கு அமரன் என டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், ராணுவம் சார்ந்த கதையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கதாநாயகியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.

 

இதன் டீசர் வெளியாகி பலரிடத்திலும் வரவேற்பை பெற்றது. இருப்பினும் ஒரு சிலர் சிவகார்த்திகேயனுக்கு இந்த கெட்டப் செட்டாகவில்லை என்று கூறியதை கேட்க முடிந்தது. படத்திற்காக தனது உடலை வருத்தி, பல விஷயங்களை சிவக்கார்த்திகேயன் செய்திருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏ ஆர் முருகதாசு உடன் சிவகார்த்திகேயன் இணைந்திருக்கிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

 

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கல்லூரி மாணவர் கெட்டப் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த கதை விஜய்க்காக எழுதப்பட்டது என்றும், ஆனால் கடைசியாக அது சிவகார்த்திகேயன் கையில் போய் சேர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்தை தொடர்ந்து முருகதாஸ் அடுத்ததாக பாலிவுட்டிற்கு சென்று சல்மான் கானை இயக்குகிறார். இதனால் எஸ்கே படத்தின் சூட்டிங்கில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

 

இதில் வில்லனாக வித்யூத் ஜமால் நடிப்பதாக கூறப்பட்டது. இவர் ஏற்கனவே துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இப்போது புதிதாக மலையாள நடிகர் பிஜுமேனனும் படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் மலையாளத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தில் ஐயப்பனாக நடித்திருந்தார். தமிழிலும் சில திரைப்படங்களை நடித்து இருக்கும் சூழலில், எஸ் கே படத்தில் அவரது வருகை படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.

சற்று முன்