- Advertisement -
Homeபொழுதுபோக்கு62வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை நளினி, அவருக்கு தம்பி கொடுத்த பரிசு - அடேங்கப்பா...

62வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை நளினி, அவருக்கு தம்பி கொடுத்த பரிசு – அடேங்கப்பா இது வேற லெவல் சர்ப்பரைஸா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நளினி. அப்போது ஏராளமான படங்களில் நாயகியாக நடித்து வந்தார். இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கிய உயிருள்ளவரை உஷா படம் தான் நளினி அறிமுகமான முதல் படம். அதன்பிறகு அவர் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார்.

நூறாவது நாள் 24 மணி நேரம் கரிமேடு கருவாயன் கீதாஞ்சலி சரணாலயம் நன்றி நல்லநாள் மனைவி சொல்லே மந்திரம் ராஜாத்தி ரோஜாக்கிளி தங்கைக்கோர் கீதம் அன்னை பூமி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி டிசம்பர் பூக்கள் அஞ்சாத சிங்கம் ஈட்டி நான் பாடும் பாடல் நாளை உனது நாள் உரிமை வீட்டுக்காரி நவகிரக நாயகி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை நளினி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1987ம் ஆண்டில் நடிகர் ராமராஜனை நளினி காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராமராஜன் நளினி தம்பதிக்கு அருணா அருண் என இரட்டை குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 2000ம் ஆண்டு ராமராஜனை நளினி விவாகரத்து செய்தார். விவாகரத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் டிவி சீரியல்களில் நளினி நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை நளினி தனது 62வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையடுத்து அவரது தம்பி 62 புடவைகளை அவருக்கு பரிசாக அளித்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். நளினிக்கு புடவை என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் ஒரு முறை கட்டிய புடவையை அவர் மீண்டும் கட்ட மாட்டார். தினமும் புது புடவையை தான் கட்டுவார். புடவை வைப்பதற்கு என்று தனியாக ஒரு வீடு வைத்திருக்கிறார்.

நளினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு புடவையால் யாரோ அபிஷேகம் செய்வது மாதிரி புடவை குவியலை சுற்றி அவர் நெகிழ்ச்சியுடன் அமர்ந்திருப்பது போன்ற வீடியோவை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். இதுகுறித்து நடிகை நளினி கூறியதாவது, என் பிறந்த நாளை முன்னிட்டு என் தம்பி கார்த்திக் கொடுத்த மறக்க முடியாத பரிசு இது.

அமெரிக்காவில் இருக்கும் அவர் என் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் ஆக வந்து என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பி இந்த பிறந்தநாள் பரிசை கொடுத்தார். ஒன்றல்ல இரண்டல்ல 62 புடவைகளை பரிசாக கொடுத்தார். அந்த எண்ணிக்கை அதிகம் என்பதால் அப்படியே என்னை சுற்றி குவிந்து விட்டது. அந்த வீடியோவும் வைரலாகி விட்டது. இந்த பிறந்த நாளை என் தம்பி தந்த பரிசை என்னால் எப்படி மறக்க முடியும்? என்று நடிகை நளினி கூறியிருக்கிறார்.

சற்று முன்