- Advertisement -
Homeபொழுதுபோக்குஆடி வௌ்ளி தினத்தில் அம்மன் கோவில் வாசலில் பிரபல நடிகை செய்த விஷயம் - ஆச்சரியப்பட்ட...

ஆடி வௌ்ளி தினத்தில் அம்மன் கோவில் வாசலில் பிரபல நடிகை செய்த விஷயம் – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை நளினி. அந்த காலகட்டத்தில் வெளியான பல படங்களில் நாயகியாக நடித்தவர் நளினி. விஜயகாந்த் சத்யராஜ் மோகன் பிரபு கார்த்திக் சுரேஷ் அர்ஜூன் முரளி என அப்போதைய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். எந்த கேரக்டர் என்றாலும் சிறந்த நடிப்பை தரக்கூடியவர்.

அப்போது பல படங்களில் உதவி இயக்குனராக பணிசெய்த ராமராஜனுடன் காதல் ஏற்பட்டு நளினி அவரை பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துக்கொண்டார். அதன்பிறகுதான் ராமராஜன் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

- Advertisement -

திருமணத்துக்கு பிறகு நளினி சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால் அவரது கணவர் ராமராஜன் பெரிய நடிகராகி விட்டார். எங்க ஊரு பாட்டுக்காரன் எங்க ஊரு காவல்காரன் தங்கமான ராசா மனசுக்கேத்த மகாராசா கரகாட்டக்காரன் என பல படங்களில் நடித்து ராமராஜன் முன்னணி நடிகராகி விட்டார்.

ஆனால் ஒரு கட்டத்தில் ராமராஜன் நளினி இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை நளினி பல படங்களில் அம்மா அக்கா அண்ணி அத்தை கேரக்டர்களில் நடித்து வருகிறார். காமெடி ரோலிலும் நடிக்கிறார். டிவி சீரியல்கள், விளம்பரங்களில் நளினி நடித்து வருகிறார்.

- Advertisement -

ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்ட நடிகை நளினி, வழிபாட்டு தலங்களுக்கு அதிகளவில் செல்லக்கூடியவர். அந்த வகையில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று சென்னையில் உள்ள வேற்காடு திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நடிகை நளினி சுவாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டார் அதன் பிறகு கோவில் வாசலில் நின்று அவர் மடிப்பிச்சை ஏந்தி காணிக்கை செலுத்தினார்.

இதுகுறித்து நடிகை நளினி கூறியதாவது, என்னுடைய இஷ்ட தெய்வம் என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வம் என்னுடைய உயிராக இருக்கும் தெய்வம் திருவேற்காடு ஸ்ரீ கருமாரியம்மன். எனது கனவில் அம்மன் வந்து எனக்கு என்ன செய்யப் போகிறாய் என கேட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் மடிப்பிச்சை ஏந்தி என்னால் முடிந்த காணிக்கையை தருகிறேன் அம்மா என்று தெரிவித்தேன் என்று நடிகை நளினி கூறினார்.

- Advertisement -

சற்று முன்