- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லியில் அஜித்துடன் ஜோடி போடப்போவது இந்த நடிகைதான்... அதுவும் ஐந்தாவது முறையாக இணையப்...

குட் பேட் அக்லியில் அஜித்துடன் ஜோடி போடப்போவது இந்த நடிகைதான்… அதுவும் ஐந்தாவது முறையாக இணையப் போவதால் ஆச்சரியத்தில் கோலிவுட்….

- Advertisement -

நடிகர் அஜித் குமார் தற்போது விடாமுயற்சியை கைவிட்டு குட் பேட் அக்லி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை லைக்கா தயாரித்து வர, அந்நிறுவனத்திற்கும் அஜித் குமாருக்கும் இடையே ஏற்பட்ட உரசல் தான் தற்போது படப்பிடிப்பு நடைபெறாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 

இது ஒரு பக்கம் இருக்க, பட்ஜெட் பிரச்சனையே அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு தடையாக இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். மகிழ் திருமேனி இயக்கும் படம் என்றாலே அதில் இவ்வளவு பிரச்சனையா என்றும் சினிமா விமர்சகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

 

விடாமுயற்சியில் வெரைட்டி காட்ட உழைத்து வரும் அனிருத், வேதாளம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடலைப் போலவே ஒரு குத்து பாடலை விடாமுயற்சிக்காக இறக்கி இருக்கிறாராம். படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் இடம் பெற்றிருப்பதால் அவர்களின் கதாபாத்திரம் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

தற்போது இதன் சூட்டிங் நடைபெறாமல் இருப்பதால், குட் பேட் அக்லியில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்குமார். திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த படத்தை எடுத்து வருகிறார்.

 

இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதில் அஜித் மூன்று கெட்டப்புகளில், கலர் கலர் சட்டைகளோடு, உடலில் டாட்டூ உடன் காட்சியளித்தார். இதுவரை பார்க்க முடியாத அஜித் இதில் தெரிவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். எக்ஸ் வலைதளத்தில் மட்டும், 41 மில்லியன் பார்வையாளர்களை இந்த போஸ்டர் பெற்றது.

 

தற்போது ஹைதராபாத்தில் இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது, குட் பேட் அக்லி படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஏற்கனவே அஜித்துடன் இணைந்து, பில்லா ஏகன் ஆரம்பம் விஸ்வாசம் என நான்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஐந்தாவது முறையாக அவர் இணைவது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

 

சற்று முன்