- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த பிரபல தமிழ் இயக்குனர்… வாய்ப்பே இல்லாததால் இப்படி ஒரு...

மலையாள படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த பிரபல தமிழ் இயக்குனர்… வாய்ப்பே இல்லாததால் இப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டாரா? – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். கேஎஸ் ரவிக்குமாரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சேரன் பாரதி கண்ணம்மா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். பார்த்திபன் மீனா நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சாதி பின்னணி கதையில் காதலை மையப்படுத்திய இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் பேசப்பட்டது.

தொடர்ந்து பொற்காலம் தேசியகீதம் தவமாய் தவமிருந்து வெற்றிக்கொடி கட்டு ஆட்டோகிராப் என பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் சேரன் சில படங்களில் அவரே ஹீரோவாகவும் நடித்தார். இயக்குனராக மட்டுமின்றி நடிகரகவும் சேரன் ரசிகர்களை கவர்ந்தார். அவரது ஆட்டோகிராப் படம் பெரிய வெற்றிப் படமாக இருந்தது.

- Advertisement -

தன்னுடைய இயக்கத்தில் உருவான படங்கள் மட்டுமின்றி தங்கர் பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதை, கரு பழனியப்பன் இயக்கிய பிரிவோம் சந்திப்போம் என பிற இயக்குவர்களின் படங்களிலும் சேரன் நடித்து வரவேற்பை பெற்றார். ஆனால் ஒரு கட்டத்தில் சேரன் இயக்கிய மற்றும் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இதற்கிடையே விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு முறை சேரன் போட்டியாளராக கலந்துக்கொண்டார். சேரனின் ஜர்னி என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்றையும் இயக்கினார். தொடர்ந்து சினிமாவில் இயக்கி வரும் சேரன் இப்போது மலையாள படம் ஒன்றில் வில்லன் கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் சேரன் நரி வேட்டை என்ற படத்தில் வில்லத்தனமான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக டோவினோ தாமஸ் நடித்துள்ளார். மலையாளத்தில் உருவான இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு நேற்று வெளியானது. வயநாட்டில் நில உரிமைக்காக போராடும் பழங்குடி மக்களை அடக்க ஒரு போலீஸ் டீம் செல்கிறது. அதில் முக்கிய அதிகாரியாக இருப்பவர் சேரன். சாதாரண போலீசாக இருப்பவர் டோவினோ தாமஸ். அங்கே கலவரம் வெடிக்க என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதைக்களம்.

இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இதுவரை நல்ல கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த இயக்குனர் சேரன் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார். இதுகுறித்து நடிகர் சேரன் கூறுகையில், இஷ்க் என்ற அருமையான படத்தை இயக்கியவர் அனுராஜ் மனோகர். அவரின் அடுத்த படம் தான் நரி வேட்டை. இந்த கேரக்டர் எனக்கு பிடித்திருந்தது. படத்தில் சொல்லப்படும் கரு அழுத்தமானது. அதனால் நரி வேட்டை படத்தில் அப்படி ஒரு கேரக்டரில் நடித்தேன். இயக்குனர்தான் என்னை அந்த ரோலுக்கு தேர்வு செய்தார் என்று இயக்குனர் சேரன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்