- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியுடன் நடித்தபோது எனக்கு அது தெரியாது, தெரிந்திருந்தால் அவருடன் நான் நடித்திருக்க மாட்டேன் - பல...

ரஜினியுடன் நடித்தபோது எனக்கு அது தெரியாது, தெரிந்திருந்தால் அவருடன் நான் நடித்திருக்க மாட்டேன் – பல ஆண்டுகளுக்கு பின் நடிகை நயன்தாரா சொன்ன ரகசியம்!

- Advertisement -

மலையாளத்தில் மானசிகாரே என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. அவரை தமிழில் ஐயா படத்தில் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் ஹரி. நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக இந்த படத்தில் செல்வி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் என்ற நயன்தாரா பாடல், டிரண்டிங் ஆனது.

தொடர்ந்து தமிழில் பல படங்களில் நயன்தாரா நடிக்கும் வாய்ப்பை பெற்றார். பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார், பிறகு விஜய், அஜீத்குமார், தனுஷ், சூர்யா, சியான் விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்தார்.

- Advertisement -

துவக்கத்தில் சிம்புவை காதலித்த நயன்தாரா, அவருடன் பிரேக்கப் ஆன நிலையில் பிரபுதேவாவுடன் நெருங்கிப் பழகினார். அவருடனும் காதல் முறிவு ஏற்பட்ட நிலையில் பிறகு நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து, 7 ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்துக்கொண்டார்.

இப்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவரது நடிப்பில் அடுத்து மண்ணாங்கட்டி என்ற படம் வெளிவர இருக்கிறது. நடிகர் கவினுடன் ஒரு படத்தில் இப்போது நயன்தாரா நடித்து வருகிறார்.

- Advertisement -

நயன்தாரா ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்தார். தொடர்ந்து சிவாஜி படத்தில் பல்லேலக்கா என்ற பாடல் காட்சியில் மட்டும் நடித்தார். குசேலன், அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதில் சந்திரமுகி படம்தான் நயன்தாரா, ரஜினி நடிப்பில் பெரிய வெற்றிப் படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை நயன்தாரா கூறியதாவது, சந்திரமுகி படப்பிடிப்பில் முதல் நாள் முதல் காட்சி ரஜினியுடன் நடிக்க வேண்டியிருந்தது. அவர் மிகப்பெரிய ஸ்டார் நடிகர் என்பது அப்போது எனக்குத் தெரியாது. அதுதான் எனக்கு அப்போது மிகவும் உதவியது என்று நினைக்கிறேன். ஒருவேளை அது எனக்கு தெரிந்திருந்தால் பயம் வந்திருக்கும். அவரது நட்சத்திர அந்தஸ்து குறித்த அறியாமைதான் எனக்கு உதவியது, என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்