- Advertisement -
Homeபொழுதுபோக்குகேரளம் மாநிலம் வயநாட்டில் நிகழ்ந்த கொடூர நிலச்சரிவு சம்பவம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நிவாரண பணியில் பிரபல...

கேரளம் மாநிலம் வயநாட்டில் நிகழ்ந்த கொடூர நிலச்சரிவு சம்பவம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நிவாரண பணியில் பிரபல நடிகை!

- Advertisement -

புயல், வெள்ளம், பூகம்பம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகள் என்பது அடிக்கடி உலகில் ஏதேனும் ஒரு இடத்தில் நடந்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் கேரளாவில் இதுபோன்ற மழைவெள்ள பாதிப்புகள் என்பது ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய இழப்பை, சோகத்தை ஏற்படுத்தி விடுகின்றன. கேரளம் மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விடுகின்றன.

சமீபத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பல பகுதிகளில் கனமழை கொட்டுவதால் வெள்ளக்காடுகளாக மாறி வருகின்றன. திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கேரள மாநிலத்தில், வயநாடு முண்டகையில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்ட நிலையில், இதுவரை 180க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சில பகுதிகளில் நிலச்சரிவால் மண்ணில் புதையுண்டு இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம், மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் கேரளம் அரசுக்கு உதவ தமிழக அரசு முன்வந்துள்ளது. பல உதவிகளை செய்து வருகிறது. இன்னும் தேவையான உதவிகளை சொன்னால், கேரள அரசுக்கு செய்து தர தயாராக இருக்கிறோம் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து தரப்பினரும் உதவ முன்வருமாறு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்பதில் மும்முரமாக பணிகள் நடந்து வரும் நிலையில், ஒருபுறம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமான நிவாரண பணிகளும் நடந்து வருகின்றன. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்து வரும் நிவாரண பணிகளில் பிரபல நடிகை நிகிலா விமலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆடுஜீவிதம் படத்துக்கு பிறகு சமீபத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்த குருவாயூர் அம்பல நடையில் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழில் சசிக்குமார் நடித்த வெற்றிவேல் என்ற படத்திலும், கிடாரி படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த ஆண்டில் வெளியான போர்த்தொழில் படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாகவும் நிகிலா விமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக பொறுப்புள்ள ஒரு பெண்ணாக, இப்படி நிலச்சரிவால் பாதித்த மக்களுக்கு நிவாரண பணிகளில் அவர் ஈடுபட்டு வருவது, மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

சற்று முன்