- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஏங்கிய 80களின் டாப் நடிகை, பல வருடம் கழித்து...

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஏங்கிய 80களின் டாப் நடிகை, பல வருடம் கழித்து தற்போது வாய்ப்பு வழங்கிய இயக்குனர், எந்த படத்துல தெரியுமா?

- Advertisement -

ரஜினிகாந்த் 1970களில் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர். அதன் பின் பத்தாண்டுகளிலேயே சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்தார். அவருக்கு ஜோடியாக நடிக்க இப்போதும் பல நடிகைகள் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் 1980களில் டாப் நடிகையாக திகழ்ந்த ஒரு நடிகை அக்காலகட்டத்தில் ரஜினிகாந்துடன் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என ஆசைப்பட்டாராம். ஆனால் அது நடக்கவில்லையாம். இந்த நிலையில் தற்போது அவர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம். அவர் யார்? எந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்? என்பது குறித்த தகவலை இப்போது பார்க்கலாம்.

மணிரத்னம் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளியான “அக்னி நட்சத்திரம்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிரோஷா. இவர் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான எம்.ஆர்.ராதாவின் மகள். நடிகை ராதிகா சரத்குமாரின் தங்கையும் ஆவார். நிரோஷா 80களில் இளைஞர்களின் மனதை கொள்ளைக்கொண்ட கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர்.

- Advertisement -

இவர் கமல்ஹாசன், ராம்கி, அர்ஜூன், கார்த்திக் போன்ற தமிழ் சினிமாவின் டாப் கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். ஆனால் ரஜினிகாந்துடன் மட்டும் நடிக்கவில்லை. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து தற்போது ரஜினிக்கு மனைவியாக ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

அதாவது ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் “லால் சலாம்” திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு மனைவியாக நிரோஷா நடிக்கவுள்ளாராம். இவ்வாறு உண்மைக்கு நெருக்கமான செய்தி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன், தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

நிரோஷா தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சசிகுமாரின் “ராஜ வம்சம்” திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

- Advertisement -

சற்று முன்